திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது . நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு . அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது .
உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும் . நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரியநேரத்தில் செய்து கொள்ளவும் வசதி யளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம் ;
இந்த தளத்தின் மூலம் இன்றைய நாள் , எதிர்வரும் நாள் , வாரம் , மாதம் என எதிர்கால திட்டங்களை இலகுவாகவும் விரைவாகவும் பதிவு செய்துகொள்ள முடியும். அத்துடன் நீங்கள் குறித்த நாளில் செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கூகுள் டாக் (GOOGLE TALK ) மூலம் இந்த தளம் உங்களுக்கு அறியத்தருகிறது;
இந்த தளத்தின் வசதியினை பெற உங்களின் கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ள வேண்டும்; இந்த தளத்தின் வசதிகள் ஆப்பிள் மற்றும் ANDROID செயலிகளாக உங்கள் ஆப்பிள் மற்றும் ANDROID சாதனங்களில் தரவிறக்கம் செய்யமுடியும் .
தளத்திற்கு செல்ல www.coolendar.com
No comments:
Post a Comment