DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, June 26, 2015

எந்த போன் வாங்கலாம்..?வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்னை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானதுதான்.

புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பலவற்றை பரிசீலித்தாக வேண்டும். இவற்றோடு வடி வமைப்பு, ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம்? என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் 'விச் போன்' எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணை யதளத்தில், ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?!

ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...

* டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆண்ட்ராய்டு: இந்த அப்ளிக்கேஷன் மற்ற அப்ளிகேஷன்களை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

* அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்: இந்த அப்ளிக்கேஷன் மூலமாக அதிகபட்சம் மூன்று ஃபைல்கள் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

* டவுன்லோடு ப்ளேஸர்: இந்த அப்ளிக்கேஷனை அனைத்து வித பிரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.

* டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்: உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு திறன் மிக்கது.
லோடர் டிராய்டு டவுன்லோடு மேனேஜர்: சிறிய அளவிலான இந்த அப்ளிக்கேஷன் எவ்வித ஃபைல்களையும், எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடு செய்யும் சிறப்புக் கொண்டது.

இன்னும் இதுபோன்று பல டவுன்லோடு மேனேஜர்கள் இன்றைக்கு சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் இனி எதையும் விரைவாக டவுன்லோடு செய்யலாம்!

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அறிமுகம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. இனி மைக்ரோசாப்ட் வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்செல் மென்பொருட்களை ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தலாம்.

டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாப்டின் விஸ்டோஸ் இயங்குதளம் கோலாச்சுகிறது. விண்டோஸ் பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்டின் வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகிய மென்பொருட்கள் பிரபலமாக உள்ளன.டெஸ்க்டாப்பில் தட்டச்சு செய்யவும், கணக்குகளை கையாளவும் வேர்ட் மற்றும் எக்செல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், காட்சி விளக்கங்களுக்கு பயன்படும் மென்பொருளாக பவர்பாயிண்ட் விளங்குகிறது.

Thursday, June 25, 2015

நீங்களும் படம் வரையலாம்! புது அப்பிளிக்கேஷன்

Android மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷன்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷனினை வெளியிட்டார். இந்த செயலி மூலம் முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான இந்த செயலி கூகுளின் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதோடு மக்கள் நேரடியாக பிரதமருடன் உரையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வது, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நேரடியாக பிரதமரிடம் இருந்து பெற முடியும்.


லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp&hl=en

உங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய

உங்களிடம் ANDROID மொபைல் இருக்கிறதா? மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா? உங்கள் மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய வழி இருக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் பணத்தை செலவலிக்க வேண்டும். இலவசமாக நீங்களே இலவசமாக RECHARGE செய்து கொள்ளுங்கள்

Earn talktime

.பிறகு அந்த மென்பொருளை OPEN செய்து உங்களுக்கு உங்களின் மொபைல் என்னை கொடுத்து ஒரு அக்கௌன்ட் OPEN செய்து கொள்ளுங்கள்.பின்பு இந்த மென்பொருளில் இருந்து நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் கிடைக்கும்.

தினமும் ரூ 50,100,200 இலவசமாக உங்கள் android mobile மூலம் RECHARGE செய்யலாம். LINKயை CLICK செய்து உங்கள் MOBILEலில் இந்த APP - http://10254531.earntalktime.com download செய்யவும்.

உங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா

ஹார்டுவேர்

வேகமான வைபைக்கு முக்கியமாக அப்-டூ-டேட் ஹார்டுவேரை பயன்படுத்துங்கள் இதற்கு வயல்ரெஸ் என் சிறந்ததாக இருக்கும்

ரவுட்டர்

உங்க ரவுட்டர் பார்க்க அழகாக இல்லை என்று அதை மறைத்து வைக்க கூடாது, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் முழுமையான சிக்னல் கிடைக்கும்

வயர்லெஸ் சேனல்

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வைபை உங்களது வைபைக்கு இடையூறாக இருக்கலாம், இதை சரி செய்ய வைபை ஸ்டம்ப்ளர் அல்லது வைபை அனலைஸர் போன்றவற்றை பயன்படுத்தி உங்க வைபையை சரியான சேனல் கிடைக்கும் இடத்தில் பொருத்துங்கள்

நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள்

இந்த App உலகம் முழுவதும் எங்கு தற்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என்றும் மேலும் அந்த நிலநடுகங்களில் அளவுகளை துல்லியமாக நமக்கு காட்டுகிறது.
.
Earthquake Alert

மேலும் ,இதில் Alert Option உள்ளது அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது அருகில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் உடனே உங்களுக்கு Notification மூலம் Alert தெரிவிக்கப்படும்
.
மேலும் இதில் சில அம்சங்கள் உள்ளது அதை கீழே பாப்போம் :

●Tab between map and list
●Latest quakes in the World.
●Filter what you see
●Click quake to view on map
●Map shows magnitudes
●View details on USGS site
●Alerts and Push notifications!
●Download the Alerter App to be more informed!
●Satellite Map view
●Share to social media
●Report if you felt it to USGS
●Choose what you want to load

ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் Delete செய்த Files களை திரும்பி பெற வேண்டுமா !!

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் நீங்கள் Delete பண்ண Files களை திரும்பி பெற வேண்டுமா !!இதோ ஆண்ட்ராய்டு மொபைல்காக Recycle Bin App

அம்சங்கள் :

★உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீங்கள் நீக்கிய புகைப்படம் , ஆவணம் , வீடியோ கோப்புகள் களை மீட்க முடியும்

★மேலும் நீங்கள் நீக்ககூடிய கோப்புகளில் எவ்வாறான கோப்புகளை இந்த மென்பொருள் சேமிக்க வேண்டும் என்பதையும் இதில் தெளிவு செய்யும் வசதி தரபட்டுள்ளது

★உதாரனத்திற்க்கு புகைப்படங்கள் மட்டும் அல்லது வீடியோ கோப்புகள் மட்டும் என தெளிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது

★அது மட்டும்மல்லாம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீக்கிய ஆண்ட்ராய்டு Application கூட திரும்பிபெற முடியும்

★மேலும் நீங்கள் நீக்கிய கோப்புகள் எவ்வளவு காலத்துக்கு பின் (1 வாரம் , 1 மாதம் , 3 மாதம் ) தானாக நீக்கபட வேண்டும் என்பதையும் தெளிவு செய்துகொள்ளும் வசதி இதில் தரபட்டுள்ளது

எனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமல் வேண்டாம்.

வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு உதவும் அப்ளிக்கேஷன்

வாகன டிரைவர்கள் தமது வாகன டயர்களில் உள்ள காற்றின் அமுக்கத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் அளவிடுவதற்கான அப்ளிக்கேஷனை Fobo நிறுவனம் உருவாக்கியுள்ளது.புளூடூத்தின் உதவியுடன் இணைக்கப்படும் இவை டயரிலுள்ள காற்றின் அமுக்கம் குறையும்போது எச்சரிக்கை செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
Tire Pressure Monitoring System (TPMS) எனப்படும் இத்தொழில்நுட்பத்தினை iOS மற்றும் Android ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக பயன்படுத்த முடியும்.மேலும் இவற்றில் தொடர்ச்சியாக 2 வருடங்களுக்கு மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ?

நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ? அப்போ உங்கள் கண்களை பாதுக்காக இந்த App பயன்படுத்துங்க பாஸ் !!நண்பர்களே சிலர் இரவில் அதிகமாக மொபைல்லை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கண் கூச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுகின்றது,முழுமையாக Brightness குறைத்தால் கூட சிலருக்கு இந்த எரிச்சல் ஏற்படுகின்றது..

எனவே இந்த எரிச்சல் நாளடைவில் உங்கள் கண்களையே பெரியதாக பாதித்துவிடும்
.
ஆனால் இந்த Appஐ பயன்படுத்துவதால் உங்களை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றது ... நீங்கள் இந்த Appஐ டவுன்லோட் பண்ணிட்டு அதில் Night Mode என்று ஒரு Option இருக்கும் அதை டிக் செய்தால் மட்டும் போதும்..கண் கூச்சல் அல்லது எரிச்சல் போன்ற ஆபத்தில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது..

பெண்கள் பேஸ்புக்கில் தவறாக சித்திரிக்கப்படுவதை தடுக்கும்வழிமுறை

இணையத்தில் சாதாரண பெண்களின் புகைப்படங்களை எடுத்து மோசமான பக்கங்களில் பகிரும் அவலம் மிக சர்வ சாதரணமாக நடக்கிறது. பெண்கள் இதற்காக மனம் குமுறி இணையத்தை விட்டு விலகவும் நேரிடுகறது. ஆனால் எந்த தனிநபரின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியில்லாமல் பகிருவது, அதுவும் மோசமான பக்கங்களில் பகிருவது அதிலும் பாலியியல் சமபந்தபட்டு மோசமாக பின்னூட்டம் இடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

எனவே புகைப்படம் பகிரப்பட்ட பெண்கள் அந்த பக்கங்களில் இருந்து புகைப்படத்தை எடுக்க வைக்கலாம். முக்கியமாக பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உடனே பெண்கள் ப்ளாக் செய்கிறார்கள். ஆனால் ரிப்போர்ட் செய்துவிட்டே ப்ளாக் செய்யவேண்டும். ரிப்போர்ட் செய்யும் முன் அவர்கள் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பக்கத்தை சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்து கொள்வதால் பிறகு தேவை என்றால் கம்ப்ளயின்ட் செய்ய வசதியாக இருக்கும்.
ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி?

1. புகைப்படதுடன் அந்த பக்கத்தின் பெயரும் ஸ்க்ரீனில் தெரியும்படி வைக்கவேண்டும்.

2. வேறு Tab கள் இருந்தால் அனைத்தையும் மூடிவிட்டு இந்த பக்கம் மட்டும் தெரியும்படி வைக்கவேண்டும்.

3. விண்டோஸ் கீ போர்ட் ல் வலது பக்கத்தில் prt sc என்று எழுதப்பட்ட பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்தால் ஸ்க்ரீன் காப்பியாகும்.(copy)

4.MS Paint சென்று paste செய்தால் இந்த ஸ்க்ரீன் அப்படியே சேவ் ஆகிவிடும். பிறகு அதை Folder ல் சேவ் செய்து கொள்ளலாம்.

இவை நமக்கு வழக்கு செய்ய ஒரு சாட்சியாக இருக்கும். எனவே முதலில் சாட்சியாக ஆதாரங்களை எடுத்து வைத்து கொண்டு ரிப்போர்ட் செய்தல் மிக நலம்.

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்


ஈக்கள், கொசு, கரப்பான்பூச்சி, மூட்டை பூச்சி, வண்டு சிண்டு என வீட்டில் நம்மோடு பலவகை பூச்சிகளும் குடித்தனம் நடத்தி வரும். சில பூச்சிகள் வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது, வண்டுகளை போல. ஆனால், சிலவன நம்மை நிம்மதியாக ஓரிடத்தில் உட்கார விடாது, 10 நிமிடங்கள் கூட தூங்கவிடாது தொல்லை செய்துக்கொண்டே இருக்கும், மூட்டை பூச்சிகளை போல.

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!

இவற்றை எல்லாம் துரத்த வெளியில் கடையில் இருந்து இரசாயன மருந்துகளை வாங்கி கொண்டு வந்து அடித்தால், நாம் தான் ஓர் நாள் வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டுமே தவிர, அவை வீட்டில் ஜம்மென்று இருக்கும். வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க… வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் இருக்கும் போது ஏன் வீணாக சிரமப்பட வேண்டும்….
 கொசுக்களுக்கு பூண்டு கொசுவினை விரட்ட சிறந்த மருந்து உங்கள் சமயக்கட்டில் இருக்கும் பூண்டு. நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது

Friday, June 12, 2015

நீங்கள் அம்மா சாயலா… அப்பா சாயலா? கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன்

பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா?
ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேள்விதான். இதற்கான பதில் அவரவர் பார்வையில் இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பை ஒரு சாப்ட்வேரிடம் விட்டால் எப்படி இருக்கும்? அதைதான் ‘லைக்பேரண்ட் ஆப்’ செய்கிறது.
தாங்கள் யார் சாயலில் இருக்கிறோம் என அறிய விரும்பும் நபர், இந்த செயலியில் தங்கள் புகைப்படம் மற்றும் பெற்றோர் படங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, யாருடைய சாயல் என ஆய்வு செய்யும் பகுதியை க்ளிக் செய்தால், பெற்றோர் இருவரில் யாருடைய சாயல் அதிகம் என சதவீத கணக்கில் தெரியவரும்.
பையனோ, பெண்ணோ அச்சு அசல் அம்மா சாயல் என வைத்துக்கொள்ளுங்கள் இந்த செயலி அம்மாவைப் போல 70 சதவீதம் இருப்பதாக சொல்லலாம். சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? அதில் சந்தே கம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் இந்த செயலியின் கணிப்பு துல்லியமானது என்று சொல்வதற்கில்லை. துல்லியமானது என இந்த செயலியும் சொல்லவில்லை. இதன் பின்னே பெரிய சாப்ட்வேர் ஆய்வு எல்லாம் கிடையாது. முற்றிலும் பொழுதுபோக்கிலான அம்சமாக இது செயல்படுகிறது