பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா?
ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேள்விதான். இதற்கான பதில் அவரவர் பார்வையில் இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பை ஒரு சாப்ட்வேரிடம் விட்டால் எப்படி இருக்கும்? அதைதான் ‘லைக்பேரண்ட் ஆப்’ செய்கிறது.
தாங்கள் யார் சாயலில் இருக்கிறோம் என அறிய விரும்பும் நபர், இந்த செயலியில் தங்கள் புகைப்படம் மற்றும் பெற்றோர் படங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, யாருடைய சாயல் என ஆய்வு செய்யும் பகுதியை க்ளிக் செய்தால், பெற்றோர் இருவரில் யாருடைய சாயல் அதிகம் என சதவீத கணக்கில் தெரியவரும்.
பையனோ, பெண்ணோ அச்சு அசல் அம்மா சாயல் என வைத்துக்கொள்ளுங்கள் இந்த செயலி அம்மாவைப் போல 70 சதவீதம் இருப்பதாக சொல்லலாம். சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? அதில் சந்தே கம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் இந்த செயலியின் கணிப்பு துல்லியமானது என்று சொல்வதற்கில்லை. துல்லியமானது என இந்த செயலியும் சொல்லவில்லை. இதன் பின்னே பெரிய சாப்ட்வேர் ஆய்வு எல்லாம் கிடையாது. முற்றிலும் பொழுதுபோக்கிலான அம்சமாக இது செயல்படுகிறது
No comments:
Post a Comment