DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, April 16, 2015

நேரா நேரத்துக்கு மருந்து சாப்பிட சொல்லும் ஒரு ஆப்ஸ்

இப்போது உங்களுக்கு நேரா நேரத்துக்கு மருந்து சாப்பிட சொல்லும் ஒரு ஆப்ஸ் வந்திருக்கிறது. மொபைல் ஃபோன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற ஒரு கால கட்டம் இப்போது, அந்த மொபைல் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்களை மக்கள் தினமும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

சிலர் பேசவும், சிலர் வாட்ச்சுக்கு பதிலாய் ஃபோனையும் மற்ற பலரோ இதில் நிறைய ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பலனை அனுபவித்து வருகின்றனர். இப்போது MyHealthSaverz என்னும் ஒரு ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தால் எந்த எந்த நேரத்தில் எந்த எந்த மாத்திரை மருந்துகளை சாப்பிட வேண்டும் என கரெக்டான நேரத்தில் உங்களுக்கு தெரியபடுத்தும், நீங்கள் மருந்து சாப்பிட மறந்து போய் வாட்ஸப் மற்றும் எஸ் எம் எஸ் வழி மெய் மறந்து சேட் செய்து கொண்டிருந்தால் அங்கே வந்து உங்களுக்கு நியாபகபடுத்தும்.
ஒரு கோர்ஸ் சாப்பிட சொன்ன மருந்துகளில் எவ்வளவு சாப்பீட்டீர்கள், எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை கரெக்டாய் சொல்லிவிடும். இது சில இந்திய மொழிகளில் கூட வேலை செய்யும். அது போக நீங்கள் வாங்கிய மருந்து எவ்வளவு மிச்சம் இருக்கிறது அடுத்து எப்போது வாங்கி ஸ்டாக் செய்ய வேண்டும் என்பதை கூட கரெக்டாய் சொல்லும்

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்

நமது பாஸ்வேர்டு – ய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்ன வென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Softwareஆகும்.

எனவே இந்த Program இ ருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டு களை மற்றவர்கள் மிக எ ளிதாக கண்டுபிடிக்கலாம் .

நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online BANK ACCOUNT-ய் தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப் பட்டுவிடும்.பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடை யேபாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப்செய்து பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கி விடு ங்கள். கீ லாக்கர் போன்றProgram-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள் ளும்.
எனவே நம்பாஸ்வேர்டுக ளை மற்றவர்கள் இதன்மூல ம் அறிந்து கொள்ள முடியாது.Online BANKAccount & Credit Card போன்ற முக்கியவேலைகளை இ ணையத்தில் நீங்கள் செய்யும்பொ ழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பது Secure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய வழிமுறைகள் உள்ள து.BANKபோன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய் வாங்கி வைத்து இருபார் கள் அவர்களின் வாடிகையளர்களின் நன் மைக்காக

மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?

நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்

அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்

என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

Sunday, April 5, 2015

ஆன்டிராய்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி?

ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்..

அப்டேட் ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது.ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

யுஎஸ்பி டீபக்கிங் ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும்.

ஸ்கேன் யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கான்டாக்ட் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி மூலம் டெக்ஸ்ட் மெசேஜஸ், கான்டாக்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை ரிக்கவர் செய்ய முடியும். ஸ்கேன் செய்து முடித்த பின் ரிக்கவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பேக்கப் இதையடுத்து சீரான இடைவெளியில் ஆன்டிராய்டு கருவியை பேக்கப் செய்ய வேண்டும்.

ஈ.சி. சான்றிதழ் பெற

சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும். சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம். இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை செய்துள்ளது. பொதுவாகவே ஈ.சி. கிடைக்க நிறைய பேர் தரகரை நாடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஒன்றுக்கு மூன்று முறை நடையாய் நடக்க வேண்டும். இப்போது அந்தக் கஷ்டமே இல்லை. ஒரு ரூபாயில் ஆன்லைனிலேயே எடுத்துவிடலாம். இதை வீட்டுக்கு கொரியர் அல்லது துரித அஞ்சலில்கூட அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்.
ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும். பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும். இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.
மேலும் பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.
இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன. அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும். இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும். கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
திருமணத்தைப் பதிவு செய்ய
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
சொசைட்டி ரிஜிஸ்டர்
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற