சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும். சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம். இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை செய்துள்ளது. பொதுவாகவே ஈ.சி. கிடைக்க நிறைய பேர் தரகரை நாடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஒன்றுக்கு மூன்று முறை நடையாய் நடக்க வேண்டும். இப்போது அந்தக் கஷ்டமே இல்லை. ஒரு ரூபாயில் ஆன்லைனிலேயே எடுத்துவிடலாம். இதை வீட்டுக்கு கொரியர் அல்லது துரித அஞ்சலில்கூட அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்.
ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும். பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும். இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.
மேலும் பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.
இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன. அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும். இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும். கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
திருமணத்தைப் பதிவு செய்ய
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
சொசைட்டி ரிஜிஸ்டர்
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
No comments:
Post a Comment