மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. இனி மைக்ரோசாப்ட் வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்செல் மென்பொருட்களை ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தலாம்.
டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாப்டின் விஸ்டோஸ் இயங்குதளம் கோலாச்சுகிறது. விண்டோஸ் பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்டின் வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகிய மென்பொருட்கள் பிரபலமாக உள்ளன.டெஸ்க்டாப்பில் தட்டச்சு செய்யவும், கணக்குகளை கையாளவும் வேர்ட் மற்றும் எக்செல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், காட்சி விளக்கங்களுக்கு பயன்படும் மென்பொருளாக பவர்பாயிண்ட் விளங்குகிறது.
ஆனால், ஸ்மார்ட்போன் பிரியர்கள் இந்த மென்பொருட்களை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் விண்டோஸ் போன் பயனாளிகளாக இருக்க வேண்டும். ஏனெனில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட போன்களில் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த மென்பொருட்களை பயன்படுத்தலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளை அறிமுகம் செய்ததன் தொடர்ச்சியாக மைக்ரோசாப்ட், இப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதை விரிவுபடுத்தியுள்ளதுவேர்டு அல்லது எக்செல் பயன்படுத்த விரும்புகிறவர்கள், இதற்கான செயலியை கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். வர்த்தக பயன்பாடு என்றால் தனியே அனுமதி பெற வேண்டும். மேலும் ஆண்ட்ராய்டின் மேம்பட்ட வர்ஷன் போன்களில் மட்டுமே இவை செயல்படும்.
ஆண்ட்ராய்டில் இந்த மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளதோடு, ஏற்கனவே உள்ள கூகுள் டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் சேவைகளுடனும் இணைந்து இவற்றை பயன்படுத்தலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
டவுண்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.word

No comments:
Post a Comment