இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால்பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறான செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.
மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்துகின்றன. இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்தSAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர் வீச்சும் அதிகமாக இருக்கும்.
உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (FederalCommunications Commission) எண் தர ப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.
போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன்தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர்வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக்கொள் ளலாம்.
போனில் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும்போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக
அவசியமான நேரங்களில் மட்டும் mobile ஐ பயன்படுத்துங்கள்.
உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இ ருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக் கையில் பேசவும்.
சிறுவர்களின் உடல் மற்றும் மூளையே பெரியவர்களைக் காட்டிலு
ம் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன் படுத்துவதிலிருந்துதடுக்கவும். குழந்தைகளுக்கு அருகில் இருந்து மொபைலை பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக கர்ப்பினிகளுக்கு அருகில் மொபைலில் பேசுவதை தவிர்க்கவும்.
மொபைல் போன் உறைகள் போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத்தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப்பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே உறைகள் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.
No comments:
Post a Comment