மேகங்கள் சிறுசிறு நீர்த்துளிகளையும்,ஐஸ் படிமங்களையும் உள்ளடக்கியன. இருப்பினும் சில வெண்மையாகவும் சில சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன.ஒரு வடிவத்திலிருக்கும் மேகத்தில் சூடான காற்று படும்போது ஐஸ் படிமங்கள் ஆவியாகி,மேகங்களின் வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.
மேகங்களில் பலவகை உண்டு.ஸ்ட்ராட்டஸ்(stratus) என்னும் வகை தட்டையாகவும்,க்யூமுலஸ் (cumulus) என்னும் வகை கண்கூகம் வெண்மையாகவும் காணப்படும்.இதில் வெறும் நீர்த்துளிகள் மட்டுமே உள்ளன.சிர்ரஸ்(cirrus) என்னும் வகை ஐஸ் படிமங்களை மட்டுமே கொண்டுள்ளன.இவை அதிக உயரத்தில் காணப்படுகின்றன.மேற்கூறிய அனைத்து வகை மேகங்களிலும் நீர்த்துளிகள் ,ஐஸ் படிமங்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன.இவற்றில் ஸ்ட்ராட்டஸ், ஸ்ட்ராட்டோக்யூமுலஸ் மேகங்கள் மழைத் தூறலை உண்டாக்கும்
.
.

அல்ட்ரோஸ்ட்ராட்டஸ் என்னும் மேகங்களின் சில பகுதி அடர்த்தியாகவும், சில பகுதிகள் அடர்த்தி குறைவாகவும் உள்ளன.எனவே இவை கறுப்பு வெள்ளை திட்டுக்களாகக் காணப்படும்.
நிம்போஸ்ட்ராட்டஸ்(nimbostratus) மேகங்கள் அதிக நீர்த்துளிகளோடு காணப்படுகின்றன. இவை அடர்த்தியான சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.இவற்றிற்கு அடுத்த படியாக க்யூமுலோநிம்பஸ்(cumulonimbus) மேகங்கள் மிக அடர்த்தியான நீர்த்துளிகளோடு ஒளிபுகா வண்ணம் உள்ளதால் கறுப்பாகக் காட்சியளிக்கின்றன. இவற்றிலிருந்தே அடர்ந்த மழை பொழிகின்றன.இவற்றில் நீர்த்துளிகள் மட்டுமின்றி ஐஸ் படிமங்களும் காணப்படும்.
தரையிலிருந்து பார்க்கும்போது கறுப்பாகத் தோற்றம் அளிக்கும் இவ்வகை மேகங்களை, அதிக உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து பார்க்கும்போது பிரகாச வெண்மை நிறத்திலேயே காணப்படும்.
No comments:
Post a Comment