நம் கமெராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை தகுந்த அளவு மாற்றுவதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கமெரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை.
சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இணையத்தளம் உள்ளது.
முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரி சுட்டியை சொடுக்கி குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல வேண்டும். நமக்கு தேவையான புகைப்படத்தை Browse என்ற பட்டனை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
பின் தோன்றும் விண்டோவில் நமக்கு தேவையான மாற்றங்களை செய்த பின்னர் புகைப்படத்தை கணணியில் சேமித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment