ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.
மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.
ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.
No comments:
Post a Comment