DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, January 11, 2013

வீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறைகள்



வீடு கட்ட சரியான மாதங்கள்

தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உகந்த மாதங்கள்.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் வீடு கட்டவோ, கிருஹப்ரவேசம் (புதுமனை புகுதல்) செய்வதோ கூடாது.

வாஸ்து புருஷன்
வாஸ்து புருஷனது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். இவர் ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை கீழ்காணும் எட்டு மாதங்களில் கீழ்காணும் நாட்களில் கீழ்காணும் 3 3/4 நாழிகை (90 நிமிடங்கள்) நேரம் மட்டுமே விழித்திருப்பார். இந்த 90 நிமிடங்களில் வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.

இந்த 3 3/4 நாழிகையில் வாஸ்து புருஷன்

1. பல் துலக்குகிறார்
2. நீராடுகிறார்.
3. பூஜை செய்கிறார்
4. உணவு உண்கிறார்.
5. தாம்பூலம் தரிக்கிறார்.

- இதில் உணவு உண்ணும் காலமும் தாம்பூலம் தரிக்கும் காலமும் கொண்ட 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில் (36நிமிடம்) வாஸ்து செய்வது மிகவும் சிறப்பானது என்கிறது சோதிடம்.
  • சித்திரை 10 ஆம் தேதி - காலை மணி 8.54 முதல் 9.30 மணி வரை
  • வைகாசி 21 ஆம் தேதி - காலை மணி 9.58 முதல் 10.34 மணி வரை
  • ஆடி 11 ஆம் தேதி - காலை மணி 7.44 முதல் 8.20 மணி வரை
  • ஆவணி 6 ஆம் தேதி - காலை மணி 7.23 முதல் 7.59 மணி வரை
  • ஐப்பசி 11 ஆம் தேதி - காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை
  • கார்த்திகை 8 ஆம் தேதி - காலை 11.29 முதல் மதியம் 12.05 மணி வரை
  • தை 12 ஆம் தேதி - காலை 10.41 முதல் 11.17 மணி வரை
  • மாசி 22 ஆம் தேதி - காலை 10.32 முதல் 11.08 மணி வரை
இந்த வாஸ்து நேரங்களில்
  • சித்திரை,வைகாசி, பங்குனி மாதங்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
  • ஆடி, ஆவணி மாதங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
  • ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தெற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
  • தை, மாசி மாதங்கள் மேற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
வாஸ்து சாஸ்திரப்படி கீழ்காணும் நீள, அகலமுள்ளபடிதான் அறைகள் அமைக்கப்பட வேண்டும்.

6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 43, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119, 120 போன்ற அடிகளில்தான் நீளம், அகலம் இருக்க வேண்டும்.
பொதுவான சில குறிப்புகள்
  • வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.
  • வீட்டுக்குக் காலியிடம் அமைத்தால் அது வீட்டுக்கு வடக்கு, கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும்.
  • கழிவு நீரை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.
  • வாசல்படிகள் ஒற்றைப்படியில் அமைக்க வேண்டும். இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறும்படி அமைப்பது சிறப்பு.
  • வீட்டின் மேல் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் போது வீட்டின் கன்னி மூலையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.
  • வீட்டிற்கு வெளியில் இருக்கும் சாலையின் மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.
  • கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவைகளை கிழக்கு அல்லது மேற்கில் அமைக்க வேண்டும்.
  • வீட்டில் சமையலறை தென்கிழக்கில் கிழக்கு நோக்கி சமையல் செய்யும்படியாகவும், உணவு உண்ணும் அறை தெற்கிலும், படுக்கையறை மேற்கிலும், பூஜையறை வடகிழக்கிலும், குளியலறை கிழக்கிலும் அமைக்கப்படுவது நல்லது.
  • வீட்டின் அருகில் மா, வாழை, வேம்பு, எலுமிச்சை மரங்கள், மல்லிகைச்செடி வளர்க்கலாம்.
  • வீட்டின் அருகில் ஆலம், பனை, எருக்கு, எட்டி, வில்வம், முருங்கை, இலுப்பை மரங்களையும் பப்பாளி, அகத்தி போன்ற செடிகளையும் வளர்க்கக் கூடாது.
கிருஹப்ரவேசம் செய்ய
  • தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் நல்லது.
  • ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் நல்லதல்ல.
  • திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் நல்லது.
  • கதவு போடாமலும், கூரை வேயாமலும், தரை, சுவர் பூசாமலும், வேள்வி, பிராமண போஜனம் செய்யாமலும் கிருஹப்பிரவேசம் செய்யக் கூடாது.

No comments:

Post a Comment