DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, December 23, 2012

புதிய நாவல்களை அறிய உதவும் தளம்


புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம்.
நாவலின் தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே.நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளம் உதவுகிறது.மிக அழகாக கூகுல் வரைப்படத்தின் மீது நாவல்களில் வரும் இருப்பிடத்தை பொருத்தி அந்த இடத்தில் கிளிக் செய்தால் நாவலை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் பற்றிய விவரம் தோன்றுகிறது.அந்த எழுத்தாளரின் பிற நாவல்களையும் அறிந்து கொள்ளலாம்.அதோடு அந்த இடத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பிற நாவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எந்த நகரம் பற்றி படிக்க விருப்பமோ அந்த நகரின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.
நாவல்கள் எல்லாமே இருப்பிடம் சார்ந்தவை தான்.ஜாய்ஸின் யுலிசஸ் என்றதுமே டப்ளின் தான் நினைவிக்கு வரும்.தி.ஜானகிராமன் என்றதுமே தஞ்சாவூர் நினைவுக்கு வருவது போல வண்ணதாசன் என்றதுமே நெல்லை நினைவுக்கு வருவது போல.ஆக இருப்பிடத்தை தொடக்கப்புள்ளியாக வைத்து கொண்டு நாவலை தேடுவது நல்ல விஷயம் தான்.
புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள இது புதிய வழி தான்.
இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் உறுப்பினர்கள் தாங்களும் நாவல்களை சமர்பிக்கலாம் என்பது தான்.
நாவ்ல்களை தேட;http://novelsonlocation.com/

No comments:

Post a Comment