கூகுள் இந்திய ரயில்வேயுடன் இணைந்து புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, இந்தியன் ரயில்வேயைச் சேர்ந்த ரயில்கள் பயணிக்கும் தகவல்கள், செல்லும் இடம், தாமதாகும் ரயில்கள், ரயில் எங்கே வந்துகொண்டிருக்கின்றன உள்ளிட்ட தகவல்களை கூகுள் மேப்பில் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இதன்படி, இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணைய தளத்தில் தெரியும் வகையில் தகவல் தந்துள்ளனர்.

இதன்படி, இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணைய தளத்தில் தெரியும் வகையில் தகவல் தந்துள்ளனர்.
விரிவாக பார்வையிட மேப்பில் சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்து பாருங்கள். அடுத்து, இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sidebar-ல் ரயில்களின் பெயரை இட்டு, அல்லது இலக்க எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தேடிப் பெறலாம்.
பயணித்துக் கொண்டிருக்கும் ரயில் தற்போது எங்கே செல்கிறது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், செல்லும் ரயில்கள், எத்தனை ரயில்கள் சரியான நேரத்துக்குச் செல்கின்றன, எத்தனை ரயில்கள் தாமதமாக செல்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment