DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Monday, December 24, 2012

காமிராக்களை ஒப்பிட ஒரு தளம்


இணையத்தில் ஒப்பிடுவது என்பது பிரச்சனையே இல்லை.பொருட்களை வாங்கும் முன் அவற்றின் விலை உள்ளிட்ட அமசங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ள கம்பேரிசன் ஷாப்பிங் தள‌ங்கள் இருக்கின்றன.அதே போல இணைய‌த்தில் புத்தகம் வாங்குவதாக இருந்தால் எந்த தளத்தில் குறைவாக வாங்கலாம் என முடிவெடுக்க வசதியாக விலைகளை ஒப்பிட்டு காட்டும் தளங்களும் இருக்கின்றன.
இந்த வரிசையில் காமிரா சைஸ்.காம் காமிராக்களின் அளவை ஒப்பிட்டு காண்பித்து வியக்க வைக்கிறது.
புதிய காமிரா வாங்கும் போது விலை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமல்ல.வடிவமைப்பு,படம் எடுக்கும் துல்லியம் என பல விஷய‌ங்கள் இருக்கின்றன.இவற்றோடு காமிராவின் அளவையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
காரணம் ,இன்று உள்ளங்கையில் அடங்கி விடும் கையடக்க காமிராக்கள் எல்லாம் வந்து விட்டன.எனவே புதிய காமிரா அளவில் சின்னதாக கச்சிதமாக இல்லாவிட்டால் அதுவே ஒரு உறுத்தலாக இருக்கும்.அதிலும் நாம் காமிரா வாங்கிய பின் நண்பர்களிடம் அதை விட சின்ன காமிராவை பார்த்து விட்டால் வருத்தமாகவும் இருக்கும்.
அதோடு ஒரு காமிரவை வாங்கும் முன் அனைத்து அம்சங்களையும் ஒப்பிட்டு பார்த்து கொள்வது நல்லது தானே.
அதை தான் காமிரா சைஸ்.காம் சாத்தியமாக்குகிறது.
அது மட்டும் அல்ல இந்த தளத்தில் காமிராக்களின் அளவை ஒப்பிட்டு பார்ப்பதே காட்சி ரீதியாக சிறந்த அனுபவமாக இருக்கிற‌து.
அடிப்படையில் இந்த தளம் இரண்டு காமிராக்களின் அளவை ஒப்பிட்டு காட்டுகிறது.அருகருகே வைத்து பார்ப்பது போல இரண்டு காமிராக்களையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.அவரவர் விருப்பத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் எந்த இரண்டு காமிராக்களையும் ஒப்பிடலாம்.
ஒப்பிடுவதற்கான காமிராக்களை தேர்வு செய்வதும் சுலபமானது தான்.ஒப்பிடுவதற்கான பகுதியில் இரண்டு வரிசைகள் இருக்கின்றன.இரண்டிலும் காமிராக்களின் மாதிரிகள் வரிசையாக வருகின்றன.எந்த நிறுவனத்தின் எந்த மாதிரி தேவையோ அதனை தேர்வு செய்து கொண்டு அதே போலவே அருகே உள்ள பட்டியலில் இருந்து ஒப்பிடுவதற்கான மாதிரியையும் தேர்வு செய்து கிளிக் செய்தால் இரண்டு காமிராக்களையும் அருகருகே வைத்து காண்பிக்கிறது.
தோற்றத்திலேயே வேறுபாடு தெரிகிறது என்றாலும் கூடுதல் புரிதலுக்காக இரண்டின் அளவுகளும் வேறுபாடுகளும் செமீ கணக்கிலும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் அருகிலேயே ஒரு பேட்டரியையும் வைத்துள்ளனர்.அதன் அளவின் அடிப்படையிலும் காமிரா அளவை மனதுக்குள் உள்வாங்கி கொள்ளலாம்.
முதல் காமிராவை இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் மாற்றுவது அந்த காமிராவை இங்கே கொண்டு வருவது என இஷ்டத்திற்கு மாற்றியும் பார்த்து கொள்ளலாம்.ஒரு காமிரா பின் இன்னொரு காமிராவையும் வைத்தும் பார்க்கலாம்.அதே போல காமிராவை பக்கவாட்டில் வைத்து தலைகீழாக வைத்து என விதவிதமான கோணங்களில் ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் இருக்கிறது.
காமிராவின் வண்ணங்களையும் ஒப்பிட்டு பார்க்க‌லாம்.காமிராவின் உள்ளங்கை தோற்றத்தியும் காணலாம்.
இவற்றோடு காமிராவுக்கான பயனாளிகள் விமர்சனத்தை அமேசான் தளத்திலிருந்தும் ஒரே கிளிக்கில் பார்க்கலாம்.
சந்தையில் புதுப்புது காமிரா வர வர அதனையும் இந்த பட்டியலில் சேர்த்து விடுகின்ற‌னர்.
ஒப்பிட்ட விவரத்தை அப்படியே பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
எனவே அடுத்த முறை காமிரா வாங்குவதாக இருந்தால் இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.
இணையதள முகவரி;http://camerasize.com/

No comments:

Post a Comment