DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, August 27, 2015

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி!

இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துக்கொண்டு,  அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.


மொத்தம் ஐந்து முறை இந்த சோதனையில் பங்கேற்றால் போதும். அதனடிப்படையில் உங்கள் செயல்பாட்டை புரிந்து கொண்டு , அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை, உங்கள் மூளையின் செயல்பாடு எந்த நேரத்தில் சிறந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும். அழகாக வரைபட விவரங்களுடன், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எந்த நேரத்தில் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறதோ , அந்த நேரத்தில் உங்களது முக்கியமான பணிகளை வைத்துக்கொள்ளலாம்.
பொதுவாக மனநிலைக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலியின் பின்னே உள்ள ஹங்க்ரி மைண்ட்ஸ் லேப் குழுவினர்,  இது தொடர்பான ஆய்வை நடத்தி மூ-கியூ செயலியை உருவாக்கி உள்ளனர். உங்கள் மூளையின் ஆற்றல் பற்றி இந்த செயலி தகவல் தருவதோடு, மூளைக்கான பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. ஆம் மூளைக்கும் பயிற்சி அவசியம் என்கின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரத்தை தெரிந்து கொள்வதோடு, இந்த ஆய்விலும் பங்கேற்ற பெருமையை நீங்கள் பெறலாம்.

No comments:

Post a Comment