ஆன் - லைன் சலுகைகள்: இணையம் மூலம் பொருட்களை வாங்கும், ஆன் - லைன் ஷாப்பிங் வசதியை பயன்படுத்தி கொள்ள விரும்பினால், எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இந்த வகை தளங்கள், பல வகையான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளிக்கின்றன தெரியுமா? இந்த சலுகைகளை தவறவிடாமல் இருக்கவும், சிறந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து வாங்கவும் உதவுகிறது, மை ஸ்மார்ட் பிரைஸ் செயலி. ஆண்ட்ராய்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி நுாற்றுக்கணக்கான மின் வணிக தளங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, குறைந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து கொள்ள உதவுகிறது. 'பிளிப்கார்ட், அமேசான், இபே, ஸ்னேப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ்' என, எல்லா தளங்களின் விலைகளையும் அறியலாம்.
பணம் செலுத்தும் முறை பற்றிய தகவல்களையும், தள்ளுபடிகளையும் தெரிந்து கொள்ள உதவுவதோடு, தேவையான புதிய பொருட்களை கண்டறியவும் கைகொடுக்கிறது. பொருட்களுக்கான சக பயனாளிகளின் விமர்சன கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம். MySmartPrice என தேடவும்.

No comments:
Post a Comment