ரயில்களில், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஆர் - மித்ரா' என்ற புதிய மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர் - மித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை, மொபைல் போனில், 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டும். ஆபத்தான நேரத்தில், மொபைல் போனில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், அருகாமையில் உள்ள ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளிக்க முடியும்.
இந்த ஆப் மூலம், ஆபத்தில் சிக்கியுள்ள பெண் இருக்கும் இடம், ஜி.பி.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பங்கள் மூலம், ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தெரிய வரும். ஆன்லைனில் மட்டுமின்றி, 'ஆப்லைன்' எனப்படும், மொபைல் போனில், இன்டர்நெட் வசதி இல்லாமல் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்க முடியும்.

No comments:
Post a Comment