பெரும்பாலானவர்கள், வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தியே, பேஸ்புக் தளத்தைக் காண்கின்றனர். இதனால், தரவிறக்கம் செய்வது மிக மிகத் தாமதமாகிறது. குறிப்பாக, புகைப்படங்களை தளத்திற்கு ஏற்றுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இதே நிலை தான்.
இவர்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக், “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. முதலில் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பேஸ்புக் தளத்தினை மிக வேகமாகப் பயன்படுத்த இயலும். படங்கள் அப்லோட் செய்வதும் டவுண்லோட் செய்வதும் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது இந்த செயலி, இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment