உலக நாடுகளின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கை பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையதளம் அடையாளம் காட்டுகிறது. பாஸ்போர்ட்டின் செல்வாக்கு, குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம் அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த பட்டியலின் படி பிரிட்டனுக்கு தான் முதலிடம். அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 147 நாடுகளில் விசா வேண்டாம். அமெரிக்காவும் இதே செல்வாக்கை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 59வது இடம். 59 நாடுகளில் இந்தியர்கள் விசா பெறாமல் செல்லலாம்.
பாஸ்போர்ட் செல்வாக்கு பட்டியல் தனியே கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வரைபடத்தின் மீது கிளி செய்தும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. மேலும் முகப்பு பக்கத்தில் வரிசையாக எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.
இணையதள முகவரி: http://www.passportindex.org/index.php

No comments:
Post a Comment