ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் பார்த்த வீடியோக்கள் ஏதேனும் ஒன்று நம்மை மிகவும் கவர்ந்து விடும். அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய நினைக்கும் போது அதற்கான வசதியை முகநூல் வழங்கவில்லை. மாறாக தற்சமயம் அவசரமாக டவுன்லோட் செய்ய மென்பொருட்களையும் தரவிறக்க செய்து வீடியோவை டவுன்லோட் செய்ய அதிக நேரம் ஆகிவிடும்.
இந்த குறையை நிவர்த்தி செய்ய புதிய வழி ஒன்று உள்ளது. இதற்கு மென்பொருள் தேவையில்லை, எந்த வீடியோவை வேண்டுமானாலும், எந்த கணினியில் வேண்டுமானாலும், இந்த முறையை பயன்படுத்தி எளிதில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
வீடியோவை டவுன்லோட் செய்ய பின் வரும் வழிகளை பின் பற்றுங்கள்:-
1.முகநூல் பக்கத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்.

2.பின் அதனை www.keepvid.com எனும் இணைய தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Paste செய்க
3.பின்பு Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும். குறிப்பு:- டவுன்லோட் என்ற பச்சை கலரில் ஒரு படம் இருக்கு அதை அழுத்தினால் தேவையில்லாத லிங்க்களுக்கு செல்லும். கீழே உள்ள படத்தை பாருங்கள். அதில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்.
4.இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாரளத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
5.பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment