இன்று இணையத்தில் சில தகவல்களை தேடும் போது நாம் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு இணையதளத்தினை பற்றி பார்க்க நேரிட்டது. அது ஒவ்வொரு நாட்டினரும் உயிராக மதிக்கும் தேசிய கீதத்தை பற்றிய இணைய தளமாகும். இத்தளமானது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே இப்பதிவின் மூலம் அறியாதவர்களுக்கு அறியும் வண்ணம் தெரிவிக்கின்றேன்.
இணைய முகவரி : http://www.nationalanthems.info/in.htm
 |
தேசியகீத இணைய தளம் |
இதில் சுமார் 400 நாடுகளின் தேசிய கீதமானது அடங்கியுள்ளது.இதனை இடது புறம் உள்ள பகுதியில் (+) குறியுடன் A,B,C,D,...என தந்துள்ளனர். அந்தந்த நாட்டின் முதல் எழுத்தினை வைத்து (+) குறியினை சொடுக்கி முழுவிவரமும் அறியலாம். மேலும் ஒவ்வொரு தேசியகீதமும் இசை வடிவமாகவும் மற்றும் இசைக்கான எழுத்து வடிவிலும் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்தினை யார் இயற்றினார், எந்த ஆண்டு மற்றும் அது எவ்வாறு உருவானது போன்ற தகவல்களும் தந்துள்ளனர்.
 |
இந்திய தேசியகீதம் இசைக்கான எழுது வடிவம் |
இந்த தேசிய கீதத்தின் முழுப் பொருளையும் அந்த நாட்டின் மொழி வடிவிலும் மற்றும் அனைவரும் அறிந்துக்கொள்ள ஆங்கில மொழி பெயர்ப்பாகவும் தந்துள்ளனர். வேறுபல தகவல்களையும் FAQ (Frequently Asked Questions) என்ற பகுதியில் தெரிவித்துள்ளனர்.
 |
கேள்வி-பதில் |
இந்த FAQ-ல் எப்படி இதன் இசையினை தரவிறக்கம் செய்வது, எந்த தேசியகீதம் சிறந்தது (அவரவர் தேசியகீதம் அவர் அவர்களுக்கு சிறந்ததுதான்),எழுது வடிவில் இல்லாத தேசியகீதம் எது? போன்ற வினாக்களுக்கு தெளிவான பதிலினை, அந்த கேள்வினை சொடுக்கும்போதே தெரியவரும். மேலும் பலதகவல்களை இத்தளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளுங்கள். நிச்சயம் இதுபோன்ற தகவல்களை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே ஒருமுறை இந்த தளத்திற்கு சென்று வாருங்களே!.
No comments:
Post a Comment