- கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்படும்.(very slow on computer speed)
- கணிப்பொறி அடிக்கடி செயலிழந்து போகும். (computer failure )
- கணிப்பொறி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart)
- கணிப்பொறியில் இருக்கும் பயன்பாடுகள்(computer applications) சரிவர இயங்காது
- வட்டுகளையும், வட்டு இயக்கிகளையும் பயன்படுத்த முடியாது.(Disks, disk drives will not be able to use.)
- அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.)
- அடிக்கடி தேவையில்லாத பிழைச் செய்திகள்(Error Message) தோன்றும்.
- அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Double extension)தோன்றலாம்.
- எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி(Anti virus software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும்.
- நீங்கள் தோற்றுவிக்காத புதிய பணிக்குறிகள்(Short Cuts) திரைமுகப்பில் காணப்படும்.
- தேவையில்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும்.
- உங்கள் கணிப்பொறியிலுள்ள முக்கியமான நிரல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.(Important files are removed without your permission)
- எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும். (The computer's memory Reduced without any reason )
- வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.(Strange news appear on screen)
- வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும்.(Strange files are in folders)
- உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும். (Unbeknownst to you, some of your files will be copied.)
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுடைய கணினியில் இருக்குமானால் நிச்சயம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment