DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, August 22, 2015

வாட்ஸ் அப்பில் உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை மாற்ற முடியும்..!

ப்ரொபைல் போட்டோ :

உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும். ஆனால், அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் – ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட் :

ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ் :

தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் – டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு :

வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் – சாட் செட்டிங்ஸ் – மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்

வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்

வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்

வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது

போன் நம்பர் வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்

ஸ்பை

உங்க நண்பரின் வாட்ஸ் ஆப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.

Monday, August 17, 2015

மை ஸ்மார்ட் பிரைஸ் செயலி

ஆன் - லைன் சலுகைகள்: இணையம் மூலம் பொருட்களை வாங்கும், ஆன் - லைன் ஷாப்பிங் வசதியை பயன்படுத்தி கொள்ள விரும்பினால், எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இந்த வகை தளங்கள், பல வகையான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளிக்கின்றன தெரியுமா? இந்த சலுகைகளை தவறவிடாமல் இருக்கவும், சிறந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து வாங்கவும் உதவுகிறது, மை ஸ்மார்ட் பிரைஸ் செயலி. ஆண்ட்ராய்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி நுாற்றுக்கணக்கான மின் வணிக தளங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, குறைந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து கொள்ள உதவுகிறது. 'பிளிப்கார்ட், அமேசான், இபே, ஸ்னேப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ்' என, எல்லா தளங்களின் விலைகளையும் அறியலாம்.
பணம் செலுத்தும் முறை பற்றிய தகவல்களையும், தள்ளுபடிகளையும் தெரிந்து கொள்ள உதவுவதோடு, தேவையான புதிய பொருட்களை கண்டறியவும் கைகொடுக்கிறது. பொருட்களுக்கான சக பயனாளிகளின் விமர்சன கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம். MySmartPrice என தேடவும்.

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி?

ஐ.எம்.இ.ஐ. கவனிக்க!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐ. எம்.இ.ஐ. எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங் க் பாக்ஸின் வெளிப்புறம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒரு போதும் வாங்க வேண்டாம்.
பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!

ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும் என ஆசைப்படுபவர், பிராண்டட் வகை ஸ்மார்ட்பொன்களையே பரிசீலனை செய்யு ங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மை யுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை வாங்குங்கள்.
முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம்.

Saturday, August 8, 2015

உங்கள் ரயில் பயணச் சீட்டு உறுதியாகிவிட்டதா?- தகவலறிய புதிய செயலி

உங்கள் ரயில் பயணச் சீட்டு உறுதியாகிவிட்டதா என்ற தகவலை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமக்கு ஜாக்பாட் அடிப்பதை விட குதூகலமான விஷயம், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் ரயில் பயணச்சீட்டில் நமக்கான சீட் உறுதியாவது. அவ்வப்போது நமது பி.என்.ஆர் எண்ணை வைத்து பயண்ச்சீட்டு உறுதியாகிட்டதா என்பதைப் பார்க்காதவர் மிகக் குறைவு.

தற்போது இதற்கு ஒரு வழியாக, ரயில்யாத்ரி என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் பயணத்தை திட்டமிடுதல், பயணச்சீட்டின் நிலை என அனைத்தையும் செய்யலாம்  (www.railyatri.in/)

ரயில்யாத்ரி (RailYatri) என்ற இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தாவது அல்லது 08080809551 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாவது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இருக்கை கிடைக்குமா என முன்னரே கணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முன்னரே பயணிகள் தங்கள் பயணத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

பி.என்.ஆர் எண் சரி பார்க்கும் செயலிகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும், மற்ற செயலிகளை விட இதில் அதிகபட்சமான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பதில்கள் தரப்படுகின்றன

குறிப்பிட்ட ரயிலில் இதற்கு முன் எப்படியான முன்பதிவு நடந்துள்ளது?, அதில் எவ்வளவு பேருக்கு சீட்டு உறுதியாகியுள்ளது போன விவரங்களை வைத்து இந்த செயிலின் 'முன்னரே கணிக்கும்' வசதி வேலை செய்கிறது.

Friday, July 17, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய, முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

தினசரி இலக்குகளை அடைய உதவும் ஆண்ட்ராய்டு செயலி!

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? இந்த செயல்களை மறக்காமல் செய்து முடிக்க ஒரு நினைவூட்டல் சேவை அவசியம் என்ற எண்ணமும் இருக்கிறதா? ஆம் எனில், ஸ்டிரீக்ஸ் செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் தினமும் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்து, அதற்கான நினைவூட்டலையும் பெறலாம். இதன் மூலம் அந்த செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கான தூண்டுதலையும் பெறலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இதை டவுன்லோடு செய்து கொண்டதும், நீங்கள் தவறாமல் செய்ய விரும்பும் செயலை குறிப்பிட வேண்டும். ஆட் நியூ டாஸ்ட் எனும் கட்டளையை கிளிக் செய்தால் வரும் கட்டத்தில், புத்தகம் படிக்க வேண்டும் என்றோ அல்லது உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றோ உங்கள் விருப்ப செயல்களை டைப் செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அந்த செயலை தினமும் நினைவூட்ட வேண்டுமா? என தெரிவித்து, அதற்கான நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.

Tuesday, July 14, 2015

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.in என்ற முகவரிக்குச் செல்லலாம்