தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? இந்த செயல்களை மறக்காமல் செய்து முடிக்க ஒரு நினைவூட்டல் சேவை அவசியம் என்ற எண்ணமும் இருக்கிறதா? ஆம் எனில், ஸ்டிரீக்ஸ் செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் தினமும் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்து, அதற்கான நினைவூட்டலையும் பெறலாம். இதன் மூலம் அந்த செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கான தூண்டுதலையும் பெறலாம்.
இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இதை டவுன்லோடு செய்து கொண்டதும், நீங்கள் தவறாமல் செய்ய விரும்பும் செயலை குறிப்பிட வேண்டும். ஆட் நியூ டாஸ்ட் எனும் கட்டளையை கிளிக் செய்தால் வரும் கட்டத்தில், புத்தகம் படிக்க வேண்டும் என்றோ அல்லது உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றோ உங்கள் விருப்ப செயல்களை டைப் செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அந்த செயலை தினமும் நினைவூட்ட வேண்டுமா? என தெரிவித்து, அதற்கான நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.
அவ்வளவுதான் அந்த செயலை நீங்கள் மறந்தாலும் இந்த செயலி மறக்காமல் நினைவூட்டி செய்து முடித்தாகி விட்டதா என கேட்கும். ஆம், எனில் விவரத்தை பதிவு செய்யலாம். இல்லை என்றால் குற்ற உணர்வுக்கு இலக்காகாமல் உடனே செய்து முடிக்கலாம்.
செய்து முடித்தவற்றை டெலிட் செய்யும் வசதியும் இருக்கிறது. நினைவூட்டல் தவிர, உங்கள் செயல்பாடு எப்படி எனும் அறிக்கையையும் இந்த செயலி வழங்குகிறது.
திட்டமிட்டு செயல்பட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த செயலி நிச்சயம் உதவியாக இருக்கும். ஐந்து செயல்கள் வரை இதில் இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் தேவை எனில் கட்டணச்சேவை உண்டு.
No comments:
Post a Comment