DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Monday, August 20, 2012

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?



குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.



இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம/டவுன் பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து
இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.




ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.


ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு
சான்றிதழ் வழங்கப்படுகிறது.


கீழ்கண்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்கள், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள்:


1. சென்னை : குடும்பநல வாரியம்(Health and Family Welfare Department) - படிவம்


2. கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்


3. ஈரோடு: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்


4. சேலம்: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்


5. தூத்துக்குடி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்


6. மதுரை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்


7. திருநெல்வேலி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்










No comments:

Post a Comment