DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, October 20, 2012

உங்களது PASSWORD அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்வதற்கு


இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.
இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது.
இதில் உங்களது அனைத்து கடவுச்சொல்லையும் சேமித்து வைத்து, இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1. எந்தவொரு நபரும் உங்களது கடவுச்சொல்லை திருடாத படி கடினமான கடவுச்சொல் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
2. குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த கடவுச்சொல்லாக தெரிவு செய்யும் வசதி.
3. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான கடவுச்சொல் கொடுத்து சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.
4. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.
இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள். அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master password தெரிவு செய்து கொள்ளுங்கள், அதன்பின் வரும் விண்டோவில் உங்களின் password வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் password சேமித்து கொள்ளலாம்.
இதே முறையில் உங்களையுடைய அனைத்து கடவுச்சொற்களையும் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான கடவுச்சொற்களை உருவாக்கலாம்.
இதற்கு Tools – password generate சென்று கடினமான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் கடவுச்சொல் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.
தரவிறக்க சுட்டி/KeyPass

No comments:

Post a Comment