DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, October 28, 2012

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்




மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள்

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.
மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். இதை நீண்ட நாள்கள் பயன்படுத்தி வந்தால் உடல் பழைய நிலையை அடைவதோடு தோல் செழிப்பாகவும் ஆகும்.
மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை  

சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. 
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

No comments:

Post a Comment