DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, October 28, 2012

இரத்த தானம்


நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ வகை தானங்கள் செய்திருப்போம். அவையெல்லாம் அடுத்தவரின் மனக்காலையையோ, பசியையோ போக்கும். ஆனால் நாம் கொடுக்கும் ரத்ததானம் ஒருவரின் உயிரைக் காக்கும். ரத்த தானத்தை சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுத்தோம் என்றால், அதைவிட பெரிய தானம் இவ்வுலகில் இல்லை என்பதே என் கருத்து.

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயி ரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத் தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே! எனவே குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்தால், பல உயிர்கள் காக்கப்படும் என்பதில் நமக்கு திருப்திதானே...

இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம்.

இரத்ததானம்  என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது. ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

எனவே தொடர்ச்சியான இடைவெளியில் ரத்ததானம் செய்து நமது உடலையும்புத்துணர்ச்சியோடு வைப்பதோடு, பிறரின் உயிரையும் காப்போம். ஒருவருடன்கூடப்பிறந்தால்தான் ரத்த சொந்தம் என்பது இல்லை. நாம் ஒருவருக்கு ரத்தம் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினால், அவரும் நம் ரத்த சொந்தம்தான்.

No comments:

Post a Comment