DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, January 11, 2013

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?

 தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல்Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

     நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

     இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!

வேலை தேடுவோருக்கு பயன் தரும் இணையதளங்கள்


1.   S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு செய்திகள் இடம் பெற்றுள்ளன.
  1. மாநிலங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  2. நகரங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப் படுத்தப் பட்டுள்ளன 
  3. துறைகள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்  படுத்தப்  பட்டுள்ளன .
  4. அனைத்து வேலைகளுக்குரிய பாடத்திட்டங்கள் ,மாதிரி வினாத் தாட்கள் , தேர்வு முடிவுகளையும் அறியலாம் .

அலுவலக உதவியாளர் முதல் அறிவியல் அறிஞர்கள் வரையிலான அனைத்து அரசு வேலைகள் பற்றிய விபரங்கள் அறியவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தளத்தின் முகவரி:  http://www.jobbersjob.com/

ஊழல் குறித்து புகார் செய்ய தனி தளம்


ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான ‌வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.


ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். 



மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.

மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்


1.   http://www.textbooksonline.tn.nic.in/
      இதனை தமிழக அரசின்  கல்வி அமைச்சகம்  இதனை உருவாக்கியுள்ளது.இதிலே  12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
2. http://www.alfy.com/ 
   இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும்  நிறம்தீட்டுதல் வீடியோ  கிளிப்ஸ் என  விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.
3. http://www.coolmath4kids.com/
     இத்தளம் குழந்தைகளின்  கணித  அறிவு  ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. http://kids.yahoo.com/
    இது  குழந்தைகளுக்காக யாஹூ  நிறுவனத்தின்  படைப்பாகும்.
5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp 
    இது தினமலர்  நாளிதழின் கல்விக்கானப்  படைப்பாகும் இதிலே  மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன. 
6. http://www.educationatlas.com/
     படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல்  அவற்றினை  மேம்படுத்துதல் போன்றவற்றினை  இத்தளம்  சிறப்பாகக்  கூறுகின்றது.
7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
 ஆங்கில  அறிவினை  ஆரம்பத்தில்  இருந்தே  வளர்த்துக் கொள்வதற்கானத்  தளம்.
8. http://www.tamilnotes.com/
   தமிழ்  இலக்கண  அறிவை  வளர்த்துக் கொள்வதற்கான  இணையம்.

ஒருவரின் கையெழுத்தை வைத்து அவரின் குணத்தை அறிய முடியும்


எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.
  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
  • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
  • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
  • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
  • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
  • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
  • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
  • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
  • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
  • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
  • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
  • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்

வீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறைகள்



வீடு கட்ட சரியான மாதங்கள்

தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உகந்த மாதங்கள்.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் வீடு கட்டவோ, கிருஹப்ரவேசம் (புதுமனை புகுதல்) செய்வதோ கூடாது.

வாஸ்து புருஷன்
வாஸ்து புருஷனது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். இவர் ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை கீழ்காணும் எட்டு மாதங்களில் கீழ்காணும் நாட்களில் கீழ்காணும் 3 3/4 நாழிகை (90 நிமிடங்கள்) நேரம் மட்டுமே விழித்திருப்பார். இந்த 90 நிமிடங்களில் வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.

உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டம் அறிய


ஒவ்வொருவர் பிறந்த தேதிக்கும் நியூமராலஜி எனும் எண்கணித முறைப்படி அவர்களுக்காக அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக் கல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ஷ்ட எண் வரும்படி அவர்களுக்கான எண்களைத் தேர்வு செய்து கொள்வதாலும், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட அதிர்ஷ்ட நிறங்களைத் தேர்வு செய்து கொள்வதன் மூலமும், அதிர்ஷ்டக்கல் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலமும் அதிர்ஷ்ட பலன்களை அடைய முடியும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். இது போல் துரதிர்ஷ்டமான நிறங்கள், எண்களையும் ஒதுக்கி விட வேண்டும் என்கிறார்கள். உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் போன்றவற்றைத் தெரிந்து பயன்படுத்தித்தான் பாருங்களேன்...
 ஆங்கில தேதி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 1, 9
  • அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெளிர்சிவப்பு, மஞ்சள், பொன்னிறம்
  • அதிர்ஷ்டக் கல் - தங்கம், மாணிக்கம்
  • துரதிர்ஷ்ட எண் - 8
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர்
ஆங்கில தேதி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 7, 1
  • அதிர்ஷ்ட நிறம் - வெளிர் மஞ்சள், வெள்ளை
  • அதிர்ஷ்டக் கல் - முத்து
  • துரதிர்ஷ்ட எண் - 9, 8
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம்
ஆங்கில தேதி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 3, 1, 9
  • அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, ரோஸ், தாமரைப்பூ நிறம்
  • அதிர்ஷ்டக் கல் - செவ்வந்திக்கல், புஷ்பராகம்
  • துரதிர்ஷ்ட எண் - 6
  • துரதிர்ஷ்ட நிறம் - கருநீலம், கருப்பு ஆழ்ந்த பச்சை
ஆங்கில தேதி 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 1, 9
  • அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம், மஞ்சள்
  • அதிர்ஷ்டக் கல் - கோமேதகம்
  • துரதிர்ஷ்ட எண் - 8
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு
ஆங்கில தேதி 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 5
  • அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்
  • அதிர்ஷ்டக் கல் - வைரம்
  • துரதிர்ஷ்ட எண் - இல்லை.
  • துரதிர்ஷ்ட நிறம் - பச்சை, கருப்பு
ஆங்கில தேதி 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 6, 9
  • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை, மஞ்சள், ரோஸ்
  • அதிர்ஷ்டக் கல் - மரகதம்
  • துரதிர்ஷ்ட எண் - 3
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர்
ஆங்கில தேதி 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 2, 1
  • அதிர்ஷ்ட நிறம் - இலேசான மஞ்சள், வெளிர்பச்சை, நீலம், வெள்ளை
  • அதிர்ஷ்டக் கல் - வைடூரியம்
  • துரதிர்ஷ்ட எண் - 7
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, சிகப்பு
ஆங்கில தேதி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 1, 5
  • அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆழ்ந்த பச்சை, நீலம்
  • அதிர்ஷ்டக் கல் - நீலக்கல்
  • துரதிர்ஷ்ட எண் - 8
  • துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர், சிவப்பு
ஆங்கில தேதி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
  • அதிர்ஷ்ட எண் - 9, 1
  • அதிர்ஷ்ட நிறம் - சிகப்பு, கருஞ்சிவப்பு, நீலம்
  • அதிர்ஷ்டக் கல் - பவளம்
  • துரதிர்ஷ்ட எண் - 2
  • துரதிர்ஷ்ட நிறம் - வெளிர் பச்சை, வெண்மை மிகுந்த வர்ணம்