DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 1, 2012

பேஸ்புக்கில் SHARE பண்ணிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை முழுமையாக நீக்க



முதலிடத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல முன்னேற்றகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது சில குறைபாடுகளையும் விட்டுச்செல்கிறது

அந்த வகையில் இப்போது பாவனையாளர்களால் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பிலும் சிறிய குறைபாடு ஒன்றை விட்டுள்ளது. அது என்னவெனில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு பின்னர் ஏதாவது காரணங்களால் நீக்கிவிட்டால் அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை.

எப்படி முற்றாக அழிக்கப்படுவதில்லை? நீங்கள் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் Share பண்ணியதும் அந்த புகைப்படம் Automatic ஆக பேஸ்புக்கின் ஏனைய Backup Server களுக்கு பிரதிபண்ணப்படுகிறது. இவ்வாறு பிரதிபண்ணப்படும் புகைப்படம் இலகுவாக கையாளக்கூடிய தன்மையிலும் உள்ளது. நீங்கள் அந்த புகைப்படத்தை அகற்றினாலும் அது பேஸ்புக்கின் Main Server இல் இருந்து மாத்திரமே அழிக்கப்படுகிறது. ஏனைய Server களில் அது பத்திரமாக இருக்கும். தொடர்ந்து 30 மாதங்களுக்கு, அதாவது 2.5 ஆண்டுகளுக்கு அந்த புகைப்படம் அகற்றப்படாமல் இருக்கும்.
நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் URL ஐ ஒருவர் எடுத்து வைத்திருந்தால் அந்த புகைப்படத்தை நீங்கள் அகற்றிவிட்டாலும் அவரால் உங்கள் புகைப்படத்தை பார்க்கமுடியும்.

இப்போது உங்கள் பேஸ்புக் புகைப்பட ஆல்பத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை அழிப்பதற்காக தெரிவு செய்யுங்கள். அதை New Tap இல் Open செய்யுங்கள் (Right Click on the Photo > Open in new tap). அடுத்து அந்த புகைப்படத்தின் URL ஐ காப்பி செய்துகொள்ளுங்கள். அதாவது Address Bar இல் உள்ள URL ஐ காப்பி செய்யுங்கள்.


அடுத்து புகைப்படத்தின் மீது கிளிக் செய்து Copy Image URL என்பதை கொடுத்து அதையும் காப்பி செய்துகொள்ளுங்கள். Firefox உலாவியில் Copy Link Location என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போ உங்களிடம் இரு விதமான URL இருக்கும். Address Bar இல் காப்பி செய்த URL, புகைப்படம் பேஸ்புக்கில் Share செய்யப்பட்டுள்ள முகவரி. அதாவது Main Server முகவரி. அடுத்ததாக புகைப்படத்தின் மீது Right Click செய்து பெற்றுக்கொண்ட முகவரி புகைப்படம் Original ஆக சேமித்து வைக்கப்பட்டுள்ள Server முகவரி. நீங்கள் புகைப்படத்தை அழிக்க முற்படும்போது மேலே உள்ள URL ஆன Main Server இல் இருந்துதான் அழிக்கப்படுகிறது.

ஆகவே புகைப்படத்தை அழித்துவிட்டு முதலாவது URL ஐ கொடுத்து Enter பண்ணி பாருங்கள். அந்த புகைப்படம் அகற்றப்பட்டுவிட்டதாக தகவல் வரும்.


அடுத்து இரண்டாவதாக புகைப்படத்தின்மீது Right Click செய்து பெற்றுக்கொண்ட Original URL ஐ கொடுத்து Enter பண்ணி பாருங்கள். நீங்கள் அழித்த புகைப்படம் அப்படியே இருக்கும். இதுபோலதான் வீடியோக்களும்.

No comments:

Post a Comment