DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 1, 2012

குழந்தைகள் வருங்காலத்தில் எவ்வளவு உயரமாக வளர்வார்கள் என அறிய தளம்




என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேகம் வியப்பையே ஏற்படுத்தும்.நேற்று சின்ன பிள்ளையாக பார்த்த பையனை இன்று பார்த்தால் நெடுநெடுவென வளர்ந்து நிற்பது வாழ்க்கை தரும் ஆச்சர்யங்களில் ஒன்று தான்.
எல்லாம் சரி!பிள்ளைகள் வருங்காலத்தில் எத்தனை உயரமாக வளர்வார்கள்? என்பதை அறிய முடியுமா? என்று எப்போதேனும் நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
இந்த கேள்வியை தான் ஹைட் பிரடிக்டர் இணையதளமும் கேட்கிறது.இந்த கேள்விக்கான பதிலையும் தருகிறது.அதாவது பிள்ளைகள் வருங்காலத்தில் எந்த அளவுக்கு உயரமாக வளருவார்கள் என்பதை அவர்களின் தற்போதைய அம்சங்களை வைத்து கணக்கிட்டு சொல்கிறது இந்த தளம்.

இப்படி வளரும் பிள்ளைகளின் உயர்த்தை கணக்கிட்டு சொல்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள தளம் இது.
பிள்ளை ஆணா பெண்ணா ,வயது என்ன? எடை என்ன? அப்பா அம்மாவின் உயரம் என்ன என்ற விவரங்களை இந்த தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் சமர்பித்தால் அதனடிப்படையில் எதிர்காலத்தில் அவர்கள் எந்த அளவுக்கு உயரமாக இருப்பார்கள் என்பதை இந்த தளம் ஊகித்து சொல்கிறது.
சிறுவர் சிறுமிகளின் வளர்ச்சி தொடர்பான கடந்த கால ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த தளம் செய்லபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யூகம் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமான எளிமையான சேவை.
பிள்ளைகள் பற்றி பெற்றோர்களுக்கு பலவித கனவுகளும் கேள்விகளும் இருக்கும்.அதில் உயரம் தொடர்பான கேள்விக்கு யூக‌த்தின் அடிப்படையில் அழகான பதிலை சொல்கிறது இந்த தளம்.
கூடவே இயற்கையாகவே உயராமாக வளர்வத்ற்கான குறிப்புகளை வழங்கும் தளத்திற்கும் இணைப்பு தந்துள்ளது.
இணையதள முகவரி;http://heightpredictor.w3ec.com/

No comments:

Post a Comment