DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 8, 2012

மிக சிறந்த மென்பொருள்கள்

மிக சிறந்த  மென்பொருள்கள்

 இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/


2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்:http://www.foxitsoftware.com/pdf/reader/



3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im


4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com


5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்:http://www.mozilla.com/enUS/firefox/personal.html


6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/


7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/


8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்:http://www.skype. com/


9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer):  டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்:http://www.cutepdf.com/


10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்:http://keeppass.info/

No comments:

Post a Comment