DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 1, 2012

ரயில் டிக்கெட்களின் நிலை அறிய உதவும் தளம்




நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்டிசி தளத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.அதோடு மைபிஎன்ஆர் இணையதளத்தை அறிந்து வைத்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளம் ஒரே கிளிக்கில் ரெயில் டிக்கெட்டின் பிஎன்ஆர் எண் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது.
இந்த வசதி தான் ரெயில்வே இணைய‌தளத்திலேயே இருக்கிறதே என்று விவரம் அறிந்தவர்கள் அலட்சியத்தோடு கேட்கலாம்.உண்மை தான் ரெயில்வே தளத்திலே பிஎன்ஆர் எண் நிலை அறியும் வசதி இருக்கிறது.

இந்த வசதியை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு ஐசிஆர்டிசி இணையதள வடிவமைப்பு சிக்கலானதாக இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க முன்பதிவு டிக்கெட் உறுதியாகிவிட்டதா என அறிய அவப்போது இந்த தளத்திற்கு விஜயம் செய்து பிஎன்ஆர் எண்ணை டைப் செய்து பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
இது பொறுமையை சோதிக்ககூடியது மட்டும் அல்ல பொன்னான நேரத்தை விரயமாக்க கூடியது.
இந்த விரயத்தை தவிர்த்து பயணிகள் டிக்கெட்டின் நிலையை சுலபமாக அறிந்து கொள்ளும் விதத்தில் மைபிஎன்ஆர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பிஎன்ஆர் எண்ணை இந்த தளத்தில் சமர்பித்தால் அதன் அபோதைய நிலையை தெரிந்து கொள்ளலாம் .அப்படியே தங்கள் செல்போன் எண்ணை சமர்பித்தால் டிக்கெட்டின் நிலை மாறும் போது அந்த தகவலை எஸ் எம் எஸ் மூலமாக இந்த தளம் தெரிவிக்கிறது.
அதாவது பயணிகள் சார்பில் அவர்கள் பிஎன்ஆர் எண் நிலையை கண்காணித்து அதில் மாற்றம் வந்தவுடன் அதனை தெரிவிக்கிறது.
மிகவும் பிசியானவர்கள் முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் நிலை என்ன ஆயிற்று என்று அறிய தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இணையத்தில் அதனை பார்த்து சொல்ல கேட்பதுண்டு அல்லவா?
இப்படி முன்பதிவு செய்த எல்லோர் சார்பிலும் பிஎன்ஆர் எண் நிலையை கண்காணித்து சொல்கிறது இந்த தளம்.அதிலும் அழகாக செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கிறது.இந்த தகவலை இமெயில் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் சார்பில் உங்கள் வேலையை யாரோ ஒருவர் செய்து கொன்டிருக்கின்றனர் என்ற உணர்வு ஏற்படுவது சிறந்தது தானே அதை தான் செய்கிறோம்(இலவசமாக) என்றும் இந்த தளம் பெருமை பட்டுக்கொள்கிறது.
இதற்கென எழுதப்பட்ட நிரல் இந்த பணியை செய்தாலும் பயணிகளை பொறுத்தவரை இது பயனுள்ள சேவை என்பதில் சந்தேகம் இல்லை.
பிஎன்ஆர் எண் நிலை மட்டும் அல்ல டிக்கெட் உறுதியாகி விட்டது என்றால் அந்த ரெயில் குறித்த நேரத்தில் புறப்படுமா அல்லது ஏதேனும் தாமதம் இருக்கிறதா போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.mypnr.in/

No comments:

Post a Comment