DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 8, 2012

ஆன்லைன் பல்கலைக்கழகங்கள்




நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா? அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா? வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல கேட்டு உங்கள் பாட அறிவை வளர்த்துக் கொள்ள ஆசையா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் Academic Earth.

இந்த தளத்தில் பல பிரபலமான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன் லைன் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை ஆசிரியர் விளக்க உரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களுக்கு மான வீடியோ உரைகள் உள்ளன. அப்படியே வகுப்பில் தரப்படும் காட்சியையும், வீடியோ பாடங்களையும் கண்டு, குறிப்பெடுக்கலாம். பாடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பின் அந்த பாடப் பிரிவின் கீழ் உள்ள துணைப் பாடப் பிரிவுகள் தரப்படுகின்றன.
இங்கும் நமக்கு தேவைப்படும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள அனைத்து வீடியோக்களும், பாடக் குறிப்புடன் காட்டப்படுகின்றன. இந்த பல்கலைக் கழகங்கள் இவ்வாறு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது நமக்கும் பயனளிக்கிறது. இதன் பாடப்பிரிவுகள் எதனையும் விட்டு வைக்கவில்லை.

அவை: Architecture, Astronomy, BiologyChemistry,Computer ScienceEconomics, Engineering, Environmental Studies, History, International Relations, Law, Literature, Mathematics, MediaStudies, Medicine, Philosophy, Physics, Psychology, ,மற்றும் Religious Studies! 

இந்த வகுப்பறைகளில் உள்ள வெளிச்சத்தைக் குறைத்து வைத்து, ஆசிரியரின் கருத்துரை மீது நம் முழுக்கவனத்தையும் செலுத்தி கேட்கவும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் விரிவுரையைக் கேட்டபின் அவருக்கு மார்க் போடும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சியின் மேலாகத் தரப்பட்டுள்ளA முதல் F வரையிலான ஸ்கேலைப் பயன்படுத்தி, இதற்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.

கற்றுக் கொள்ளவும், தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான தளம். ஒருமுறை சென்ற பின் தினந்தோறும் பல மணி நேரம் இதில் செலவிடுவீர்கள் என்பதுவும் உறுதி.


இந்த தளம் http://www.academicearth.org/ என்ற முகவரியில் இயங்குகிறது.

No comments:

Post a Comment