DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, July 17, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய, முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

தினசரி இலக்குகளை அடைய உதவும் ஆண்ட்ராய்டு செயலி!

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? இந்த செயல்களை மறக்காமல் செய்து முடிக்க ஒரு நினைவூட்டல் சேவை அவசியம் என்ற எண்ணமும் இருக்கிறதா? ஆம் எனில், ஸ்டிரீக்ஸ் செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் தினமும் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்து, அதற்கான நினைவூட்டலையும் பெறலாம். இதன் மூலம் அந்த செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கான தூண்டுதலையும் பெறலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இதை டவுன்லோடு செய்து கொண்டதும், நீங்கள் தவறாமல் செய்ய விரும்பும் செயலை குறிப்பிட வேண்டும். ஆட் நியூ டாஸ்ட் எனும் கட்டளையை கிளிக் செய்தால் வரும் கட்டத்தில், புத்தகம் படிக்க வேண்டும் என்றோ அல்லது உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றோ உங்கள் விருப்ப செயல்களை டைப் செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அந்த செயலை தினமும் நினைவூட்ட வேண்டுமா? என தெரிவித்து, அதற்கான நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.

Tuesday, July 14, 2015

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.in என்ற முகவரிக்குச் செல்லலாம்

Saturday, July 4, 2015

உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இந்த பிரச்சனைக்கு தீர்வு காண செயலி

செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

சிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம்.

இதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது.

கோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது.www.visarnews.com

Friday, June 26, 2015

எந்த போன் வாங்கலாம்..?வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்னை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானதுதான்.

புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பலவற்றை பரிசீலித்தாக வேண்டும். இவற்றோடு வடி வமைப்பு, ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம்? என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் 'விச் போன்' எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணை யதளத்தில், ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?!

ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...

* டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆண்ட்ராய்டு: இந்த அப்ளிக்கேஷன் மற்ற அப்ளிகேஷன்களை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

* அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்: இந்த அப்ளிக்கேஷன் மூலமாக அதிகபட்சம் மூன்று ஃபைல்கள் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

* டவுன்லோடு ப்ளேஸர்: இந்த அப்ளிக்கேஷனை அனைத்து வித பிரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.

* டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்: உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு திறன் மிக்கது.
லோடர் டிராய்டு டவுன்லோடு மேனேஜர்: சிறிய அளவிலான இந்த அப்ளிக்கேஷன் எவ்வித ஃபைல்களையும், எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடு செய்யும் சிறப்புக் கொண்டது.

இன்னும் இதுபோன்று பல டவுன்லோடு மேனேஜர்கள் இன்றைக்கு சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் இனி எதையும் விரைவாக டவுன்லோடு செய்யலாம்!

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.