DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, June 26, 2015

எந்த போன் வாங்கலாம்..?வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்னை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானதுதான்.

புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பலவற்றை பரிசீலித்தாக வேண்டும். இவற்றோடு வடி வமைப்பு, ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம்? என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் 'விச் போன்' எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணை யதளத்தில், ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?!

ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...

* டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆண்ட்ராய்டு: இந்த அப்ளிக்கேஷன் மற்ற அப்ளிகேஷன்களை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

* அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்: இந்த அப்ளிக்கேஷன் மூலமாக அதிகபட்சம் மூன்று ஃபைல்கள் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

* டவுன்லோடு ப்ளேஸர்: இந்த அப்ளிக்கேஷனை அனைத்து வித பிரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.

* டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்: உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு திறன் மிக்கது.
லோடர் டிராய்டு டவுன்லோடு மேனேஜர்: சிறிய அளவிலான இந்த அப்ளிக்கேஷன் எவ்வித ஃபைல்களையும், எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடு செய்யும் சிறப்புக் கொண்டது.

இன்னும் இதுபோன்று பல டவுன்லோடு மேனேஜர்கள் இன்றைக்கு சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் இனி எதையும் விரைவாக டவுன்லோடு செய்யலாம்!

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அறிமுகம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. இனி மைக்ரோசாப்ட் வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்செல் மென்பொருட்களை ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தலாம்.

டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாப்டின் விஸ்டோஸ் இயங்குதளம் கோலாச்சுகிறது. விண்டோஸ் பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்டின் வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகிய மென்பொருட்கள் பிரபலமாக உள்ளன.டெஸ்க்டாப்பில் தட்டச்சு செய்யவும், கணக்குகளை கையாளவும் வேர்ட் மற்றும் எக்செல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், காட்சி விளக்கங்களுக்கு பயன்படும் மென்பொருளாக பவர்பாயிண்ட் விளங்குகிறது.

Thursday, June 25, 2015

நீங்களும் படம் வரையலாம்! புது அப்பிளிக்கேஷன்

Android மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷன்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷனினை வெளியிட்டார். இந்த செயலி மூலம் முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான இந்த செயலி கூகுளின் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதோடு மக்கள் நேரடியாக பிரதமருடன் உரையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வது, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நேரடியாக பிரதமரிடம் இருந்து பெற முடியும்.


லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp&hl=en

உங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய

உங்களிடம் ANDROID மொபைல் இருக்கிறதா? மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா? உங்கள் மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய வழி இருக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் பணத்தை செலவலிக்க வேண்டும். இலவசமாக நீங்களே இலவசமாக RECHARGE செய்து கொள்ளுங்கள்

Earn talktime

.பிறகு அந்த மென்பொருளை OPEN செய்து உங்களுக்கு உங்களின் மொபைல் என்னை கொடுத்து ஒரு அக்கௌன்ட் OPEN செய்து கொள்ளுங்கள்.பின்பு இந்த மென்பொருளில் இருந்து நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் கிடைக்கும்.

தினமும் ரூ 50,100,200 இலவசமாக உங்கள் android mobile மூலம் RECHARGE செய்யலாம். LINKயை CLICK செய்து உங்கள் MOBILEலில் இந்த APP - http://10254531.earntalktime.com download செய்யவும்.