அசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம் !
– அசல் தேனை நாய் நக்காது !
– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது !
– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் !
– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது
– நெருப்பில் எரியாது
போன்றவை பிரபலமானவையாகும்..
ஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.
http://ranjithcronje.blogspot.qa
பல நேரங்களில் கலப்படத்தேனும் இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.
http://ranjithcronje.blogspot.qa
பல நேரங்களில் கலப்படத்தேனும் இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.
எனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் ?
எனவே, சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது ஒரு சில வழிமுறைகளை கையாண்டால் ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.
– நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம்.
– இந்தியாவை பொறுத்தவரை “அக்மார்க்” சின்னம் பொதித்த உணவுப்பொருட்களின் தரம் பரிசோதித்து பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. எனவே அக்மார்க் முத்திரையிடன் கூடிய தேன் மற்றவற்றை விட அதிக தரத்துடன் இருக்கும் என்பதை நம்பலாம். மேலும் அக்மார்க் முத்திரையுடன் கூடிய தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடும் பெறலாம் என்பது கூடுதல் அனுகூலமாகும்.
No comments:
Post a Comment