ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கி, ஏ.டி.எம்.கள் முன் தவம் கிடக்க, இதற்கு நேர் எதிராக குஜராத்தின் அகோதரா கிராமம் திகழ்கிறது.
ஏ.டி.எம்., வங்கி எதுவும் தேவையில்லை: இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம்
குஜராத்:
குஜராத்:
கடந்த 8-ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பணத்தை எடுக்க வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.கள் முன் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அகோதாரா கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் ஏ.டி.எம், வங்கி முன் சென்று பணத்தை எடுக்க காத்துக் கொண்டிருக்காமல் வழக்கம் போல தங்களது தினசரி வேலைகளைக் கவனித்து வருகின்றனர்.
இதனால் இந்த ஊரில் உள்ள ஏ.டி.எம். முன்னர் மக்கள் கூட்டத்தையும் காண முடிவதில்லை. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் இங்குள்ள சுமார் 1200 மக்களும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
http://ranjithcronje.blogspot.qa
டீக்கடை முதல் மளிகைக்கடை வரை 10 ரூபாய் என்றாலும் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தி விடுவதால் பிரதமரின் அறிவிப்பு இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
http://ranjithcronje.blogspot.qa
டீக்கடை முதல் மளிகைக்கடை வரை 10 ரூபாய் என்றாலும் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தி விடுவதால் பிரதமரின் அறிவிப்பு இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மாநில அரசின் உதவியுடன் இந்த ஊரில் திறக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கிராமத்தை சேர்ந்த 1200 பேருக்கு வங்கிக்கணக்கும், ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் அக்கவுன்டும் உள்ளது.
கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியும் என்பதால், இந்த ஊரில் இருக்கும் ஒரே ஒரு ஏ.டி.எம்.-க்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்து இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அகோதரா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment