DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, January 7, 2017

கடல் அலைகள் தோன்றுவது ஏன்?



கடல் அலைகள், சாதாரணமானது இல்லை. மேலோட்டமா பார்ப்பதற்கு வேண்டுமானால் அலைகள், சாதாரணமாக தெரியலாம்.
கடல் அலைகள் தோன்றுவது, பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்பு சக்தியினால்தான். அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தான்! பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, கடலைப் பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.
நகர்ந்து கொண்டே, இடம்மாறிக் கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும், தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ‘இனர்ஷியா’ என்னும் உலகின் மாறா நிலைப்பு தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது http://ranjithcronje.blogspot.qa தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்!
இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தை நிலவின் ஈர்ப்பு விசையின் திசையில் தொடர்ந்து நகரச் செய்யும் என்று கூறப்படுகிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே, கடல் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கி வரும்போது,  அடுத்து, பூமி, நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது என இருமுறை கடல் எழும்புகின்றன. இதனை அமெரிக்காவின் மசாச்சு செட்ஸ் நகர கடல் ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகின் புவியியல் அமைப்பு, அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில், இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்.  கொசுறா ஒரு 50 நிமிஷம் ஏன் என்று கேட்டால், பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது, நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth).
சூரியனும் அலைகளும்!
அலைகள் ஏன் ஓய்வதில்லை என்பதற்கு நிலவு மட்டுந்தான் காரணம் என்று கருதினால், நாங்களும் இருக்கிறோம் என்கிறது சூரியன். அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பெயர். ஆனால், நிலவினால் ஏற்படுகிற அலைகளைவிட, சூரிய அலைகள் சக்தி குறைந்தவை.
நிலவைவிட 27 மடங்கு சூரியன் பெரியது என்றாலும், நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறது சூரியன். அதனால், நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி, ஆற்றலில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறது என்று, தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூறுகிறது.

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
http://ranjithcronje.blogspot.qa
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்

கோலம் போடுவது ஏன்?


கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.

மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
http://ranjithcronje.blogspot.qa
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.

மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.

மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிரு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.

இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா?


 கண்கள் துடிப்பதற்கு, நமது உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்கள் உள்ளது.
http://ranjithcronje.blogspot.qa
கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்ன?

மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதால், கண்கள் அடிக்கடி துடிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.நாம் கண்கள் மூலம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை கூர்ந்து பார்ப்பது, இது போன்று நம் கண்களுக்கு அதிகப்படியான சிரம்மத்தைக் கொடுப்பதால், கண்களுக்கு அழுத்தம் அதிகமாகி அடிக்கடி துடிக்கிறது.காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை நாம் தினமும் அதிகமாக அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் அடிக்கடி துடிக்கும். எனவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.அன்றாடம் நாம் நமது உடம்பிற்கு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் மூலம் கண்களானது வறட்சியடைந்து, கண் துடிப்புகள் ஏற்படுகின்றது.நமது உடலில் ஊட்டச்சத்து மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிகமாக இருந்தால், கண்களில் உள்ள தசைகள் வலுவிழந்து அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.கண்களில் அலர்ஜிகள் ஏற்படும் போது, கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, கண்களை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கின்றது.

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?


சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது. 
http://ranjithcronje.blogspot.qa
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.
வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.
நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.
இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது

பிஸ்கட் சூடான பாலை விரைந்து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை அவ்வாறின்றி மெதுவாக உறிஞ்சுவதும் ஏன்?


அணுக்கள்
அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினால் உண்டாகும் பிணைப்பை
வேண்டர் வால் (Vander Wall’s) பிணைப்பு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த 
வரையில், அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு
வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில்
தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக்
காணலாம். இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால்
பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை
அடைந்துவிடுவதேயாகும்.
பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும்
பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும்.
பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே
குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மைhttp://ranjithcronje.blogspot.qa
அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின்
பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடான அந்நிலையில்,
சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன்
காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விரைவுத் தன்மை ஆறிய பாலில்
இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு
நிலையில் இருப்பதேயாகும்.

பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில் (cylindrical trunk) அமைந்திருப்பது ஏன்?


மரத்தின்
தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத்
தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை. புல் வகைகளின் 
தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண
அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால்
(cells) ஆனவை;http://ranjithcronje.blogspot.qa அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு
சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். தனிப்பட்ட உயிரணுவின்
அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய
இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப்
பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன.
அவை முறையே மரவியம் (Xylem), பட்டையம் (Phloem) என்பன. மரவியம் தண்டின்
நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது
மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி
வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக
உருளை வடிவில் அமைகிறது.