DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, January 11, 2013

வீட்டில் மூலிகை குடிநீர் தயாரிக்க


பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் கதாநாயகன் தேங்கி கிடக்கும் குளம், குட்டை, ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கூட சட்டையில் வடிகட்டி குடிப்பதை பார்க்க முடிகிறது. அதே இடத்தில் இருக்கும் தவளை, தேரை, பாம்பு, பல்லிகளை கூட அவர் சாப்பிடுகிறார். நாம் அந்த அளவுக்கு போகவேண்டியதில்லை. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்து போவது உறுதி.

தயாரிக்கலாம் வாங்க....
மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம், சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை ( டீ வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்ப போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்

Tuesday, January 8, 2013

இன்ஜினியரிங் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தரவிறக்கலாம்


கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று  Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். 

மாணவர்களுக்கு மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்கள்


எதையும் புதிய கோணத்தில் ஆராயும் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட்
புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது. மாணவரின் படைப்பாற்றலை
இருகரம் நீட்டி வரவேற்கிறது.  இதற்காக மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்
என்று ஒன்றை ஆரம்பித்திள்ளது. படிப்பைத்தவிர மற்றவற்றில் நாட்டம்
செல்லும் மாணவர்களுக்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு. உங்கள்
கற்பனை படைப்பை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் வாய்ப்பு
தருகிறோம் என்கின்றனர்.
நீங்கள் இணையதள வடிவமைப்பாளராக இருக்கலாம். புதிய
கற்பனையில் விளையாட்டை உருவாக்குபவராகும் இருக்கலாம்.
உங்களுக்கு மைக்ரோசாப்ட் இலவசமாக மென்பொருள்களை தருகிறது.
இதில் எப்படி நாம் சேரலாம் என்று பார்ப்போம்.
https://www.dreamspark.com/Default.aspx இந்த இணையதளத்திற்கு
செல்லவும்.படம் 1- ல் காட்டியபடி ” GO ”  என்ற பட்டனை அழுத்தி
ஒரு புது கணக்கு துவக்கவும்.அல்லது Windows live Email ID
மூலமும் Sign in செய்து கொள்ளளாம். அப்புறம் என்ன உங்கள்
தகவல்களை கொடுத்து மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் சேர்ந்து
கொள்ளவும்.என்னென்ன மென்பொருள்கள் எல்லாம் இலவசமாய்
கிடைக்கும் என்று படம் 2 -ல் காட்டியுள்ளோம்.
எல்லா மாணவர்களுக்கும் பயிற்ச்சியையும் அவர்களே
அளித்துவிடுகிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு எழும் அனைத்து
கேள்விகளுக்கும் விடை அளிக்கின்றனர்.

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் உருவாக்க தளம்


பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த  வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.istarin.com
இத்தளத்திற்கு சென்று பலவகையான ஹாலிவுட் திரைப்படங்களின்  போஸ்டரில் எந்த போஸ்டரில் நம் புகைப்படம் வைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரையில் Upload என்ற பொத்தானை  சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும் அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தின் முகம் குறிப்பிட்ட போஸ்டரில் உள்ள நபரின் முகத்துக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தை அப்படியே  பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களிடம் பகிர்ந்து  கொள்ளலாம். ஒரு வேளை நம் முகம் சரியாக வராவிட்டால் Adjust face  என்பதை சொடுக்கி நாம் மாற்றம் செய்யலாம்

ரிங்டோன் உருவாக்க உதவும் மென்பொருள்


விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
இணையதள முகவரி : http://www.musetips.com/free-ringtone-maker.html
இத்தளத்திற்கு சென்று நாம் Download என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம், தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும் Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எதில் இருந்து எதுவரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Save Ringtone to My Computer என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் சேமிக்கலாம். 

ரத்ததானம்

இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இது வரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .
 
இணையதள முகவரி: 
 
http://www.friends2support.org/
 
 
இத்தளதிற்கு சென்று என்ன ரத்தப் பிரிவு தேவை என்பதையும்,இந்தியாவில் எந்த எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில், எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்தல் போதும். உங்கள் மாவட்டத்தில் ரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு ரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம்.
 
6 வருடத்தில் 1 லச்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு ரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம்
 
சமீபத்தில் 2012 -ம் ஆண்டில் லிம்கா சாதனை புத்தகத்தில் ரத்ததானம் செய்யும் தன்னார்வ தொண்டர்களின் பெரிய வலைத்தளம் என்பதற்காக பெற்றுள்ளது. மேலும் ஆசியா ஆப் ரெகார்ட் புத்தகத்திலும், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்திலும் 2012 -ம் ஆண்டில் தன் பெயரை நிலை நிறுத்தியுள்ளது என்பது பெருமையான ஒரு நிகழ்வே...
 

Monday, January 7, 2013

விளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் தளம்


விளையாட்டுகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல செஸ் ( சதுரங்கம் ) போன்ற விளையாட்டுகள் மூலம் புத்திசாலி தனத்தை வளர்க்கலாம். இதையெல்லாம் தாண்டி விளையாட்டு மூலம் எளிதாக இசைப்பயிற்சி அளிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.musicgames.co/games-by-tag/ear-training/
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம், பல விதமான வேறுபட்ட விளையாட்டுகள் இத்தளத்தில் உள்ளது, Tones பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு வகையான விளையாட்டு, Chords , Melody என்று ஒவ்வொன்று பற்றியும் தெரிந்து கொள்ள அதற்கு இணையான விளையாட்டு என்று பல வகைகளில் உள்ளது இதில் நாம் எந்த வகையான இசையைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாக கற்கலாம்