DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, January 1, 2017

இடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

👇
தூங்கும் போது, நாம் அனைவரும் பலவிதமான கோணங்களில், படுத்து உறங்குவோம்.
அதிலும் நேராக படுத்து தூங்குவது தான் மிகவும் நல்லது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.
ஆனால் இந்த விஷயத்தில் உண்மை என்னவென்றால் நேராக படுத்து உறங்குவதை விட இடது பக்கமாக படுத்து தூங்குவதே மிகவும் சிறந்தது என்று விஞ்ஞான பூர்வமாகக் கூறப்படுகிறது.
http://ranjithcronje.blogspot.qa
இடதுபக்கமாக உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் இடது பக்கமாக தூங்கும் போது, நமது உடலின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தேங்கி இருக்கும் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அனைத்தும் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.நாம் இடது பக்கமாக தூங்குவதால், நமது உடம்பில் உள்ள இரைப்பை மற்றும் கணையம் போன்ற இரண்டு உறுப்புகளும் இயற்கையாக சந்திக்கும். இதனால் நமக்கு உணவு செரிமானம் சீராக நடைபெறும்.இடது பக்கமாக உறங்குவதன் மூலம் நமக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும் இரைப்பையில் இருக்கும் அமிலமானது, உணவுக்குழாய் வழியே மேலே ஏறாமல் தடுக்கிறது. இதனால் நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.நாம் இடது புறமாக தூங்கும் போது, பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடல் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படுகிறது.இடது பக்கமாக தூங்கும் போது, நாம் சாப்பிடும் உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படுகிறது. இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடிகிறது.

முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?

👇
சில விஷயங்களை நாம் பின்பற்றி, மிக கட்சிதமாக கடைப்பிடித்து வருவோம். அந்தவகையில் பலர் ஏன்? எதற்கு? என தெரியாமல் ஒதுக்கும் உணவு முட்டையின் மஞ்சள் கரு.
முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என ஒதுக்கும் அதே நபர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும், கொலஸ்ட்ராலில் எச்.டி.எல், எல்.டி.எல் என இரண்டு வகை இருக்கின்றன. இதில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .
சத்துக்கள்:
முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் ஆரோக்கியமான ஒன்று. அதை நாம் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்ற ஒற்றை காரணம் காட்டி தவிர்த்து வருகிறோம். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய http://ranjithcronje.blogspot.qa வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருக்கின்றன.
வைட்டமின்: எ, டி, கே, ஈ. மற்றும் பி
மினரல்ஸ்: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜின்க்.
கொலஸ்ட்ரால்:
முட்டையில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், நமது உடலில் செல் சவ்வு வளரவும், சில ஹார்மோன் சுரக்கவும் கொலஸ்ட்ரால் சிறிதளவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவின் மூலம் நமது உடல் பெரும் கொலஸ்ட்ரால் எச்.டி.எல் எனப்படும் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால்.
மூளை ஆரோக்கியம்:
முட்டையின் மஞ்சள் கருவின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் உடல் ஆரோக்கியம் சிறக்கவும் மற்றும் மூளையின் ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.
வாரத்திற்கு எவ்வளவு?
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டை (மஞ்சள் கருவுடன்) சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல்நலக் குறைபாடு ஏற்படுவதை தடுக்கும். இது உங்கள் வாழ்வியலில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆய்வுகள்:
பல ஆய்வறிக்கைகளில் முட்டையின் மஞ்சள் கரு உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் உணவு என்றும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும். அதற்கு ஏற்ற உடல் வேலை அல்லது உடற்பயிற்சி செய்யாத போதிலும் தான் இது தீங்காக மாறுகிறது என கூறப்பட்டுள்ளது.
எது தீங்கு?
பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கையாக தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் உள்ள உணவுகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, இனிமேலும் மஞ்சள் கருவை கொழுப்பு, கொலஸ்ட்ரால் காரணம் காட்டி ஒதுக்க வேண்டாம்.

தலைக்கு குளிப்பதில் சிறந்த நேரம் இரவா? பகலா?

👇👇
நாம் காலையில் தலைக்கு குளிப்பதை விட, இரவில் குளிப்பதால் தான் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.
இரவில் தலை குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் காலையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை சரியாக அலச போதுமான நேரம் இருக்காது. ஆனால் இரவில் அதிக நேரம் நமக்கு கிடைப்பதால், நிதானமாக தலைக்கு குளிக்க முடிகிறது.இரவில் தலைக்கு குளிக்கும் போது, நமது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அதிக நேரம் இருக்கிறது. இதனால் நமது கூந்தல் வறட்சியின்றி,http://ranjithcronje.blogspot.qa வெடிப்பின்றி பாதுகாக்கப்படுகிறது.நாம் இரவில் தலைக்கு குளித்தால், நமது கூந்தல் மிகவும் பலவீனமாக இருப்பது தடுக்கப்படுவதுடன், சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படுகிறது.காலையில் தலைக்கு குளித்த பின் நாம் செய்யும் கூந்தல் அலங்காரத்தால், நமது கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். ஆனால் இரவில் கூந்தலை அலங்காரம் செய்யாமல் விடுவதால், கூந்தல் பாதிப்பது தடுக்கப்படுகிறது.காலையில் தலைக்கு குளித்து கூந்தலை காய வைப்பதை விட, இரவில் தலைக்கு குளிக்கும் போது நன்றாக கூந்தலை துவட்டுகிறோம். இதனால் நமது தலையில் நீர் கோர்க்கும் பாதிப்புகள் ஏற்படாது.

ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?


தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் ரயில் வண்டிகள் வேகமாக செல்வதால், அழுத்தம் அதிகம் இருக்கும். எனவே தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் அதிகமாக போடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலகாமல் தடுப்பதற்கு, தண்டவாளங்களில் கற்கள் அதிகமாக நிரப்பப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, மரத்தின் விட்டங்கள் மூலம் ரயில் வண்டிகள் வழுக்காமல் தடுப்பதற்கு, கூர்மையான கற்கள் போடப்பட்டுள்ளது.
நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு, ரயில் தண்டவாளங்களில், ஜல்லிக் கற்களை வைத்து உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
http://ranjithcronje.blogspot.qa
களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாக தண்டவாளங்களில் செல்லும் ரயில் வண்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் தடுப்பதற்கும், தண்டவாளங்களில் அதிகமாக ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளது.

கத்திரிக்காயை உணவில் சேர்ப்பது நல்லதா கெட்டதா?

👇👇👇
கத்திரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்தது.
ஊட்டச்சது நிபுணர்கள் கூட இந்த கத்திரிக்காயை தங்களின் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
கத்திரிக்காயில் ஏராளமான விட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்துக்கள், நாசுனின் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் போன்ற நமது உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
கத்தரிக்காயின் சதையில் அதிக அளவிலான அந்தோசியனின்கள் உள்ளது. எனவே ஆய்வின் முடிவில், கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், புற்றுநோய், முதுமை, வீக்கம் மற்றும் நரம்பியல் நோய்கள் போன்ற இதர பல நோய்களையும் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.
எனவே நாம் கத்திரிக்காயை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
http://ranjithcronje.blogspot.qa
கத்தரிக்காயில் இருக்கும் விட்டமின் K மற்றும் ஃபிளாவொனாய்டுகள் நமது உடம்பில் ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுத்து, ரத்தம் உறைதப் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.கத்தரிக்காயை வறுக்காமல், எப்போதும் நன்றாக சமைத்து சாப்பிட்டால், அது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, அதிக உடல் பருமன் வராமல் தடுக்கிறது.கத்தரிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது நமது உடலின் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு, நன்றாக பாதுகாக்கிறது.கத்திரிக்காயை நாம் வழக்கமாக சமைத்து சாப்பிட்டு வருவதால், இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம்முடைய மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.கத்திரிக்காயில் இருக்கும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் எளிதில் கரையக்கூடிய நார் சத்துக்கள் நம்முடைய ரத்தத்தின் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா?


அப்பளம்! இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிட்டுவிட முடியும்.
மதிய உணவின் ருசி, அதன் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் அப்பளம் கூட உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை உண்டாக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
சோடியம்:
அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும். ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல.
முக்கியமாக உப்பின் அளவு அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் / இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.
மசாலா பப்பட்:
இன்று ருசி மற்றும் வட இந்திய கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள பப்பட் எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.
மலச்சிக்கல்:
அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.
எண்ணெய் பயன்பாடு:
அதே போல அப்பளம் சமைக்கும் போது என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம். அந்த எண்ணெயின் தரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.தரமற்ற எண்ணெயில் அப்பளம் சமைத்து சாப்பிடுவது தீய கொலஸ்ட்ரால், இதய கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்றவை உண்டாக காரணியாகலாம்.
சுகாதாரமற்ற முறை:
மற்ற உணவு பொருட்களை போல அப்பளத்தையும் சுகாதாரமாக வைத்து சமைக்க வேண்டும். சிலர் வீடுகளில் அப்பளத்தை மட்டும் திறந்த கவரில், சமையல் அறையில் ஏதோ ஒரு இடத்தில், அடுப்படியில் கீழே படும் நிலையில் வைத்து சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது.
அதே நேரம் இதயத்தையும்
வலுப் படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்த வைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்து விட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) நம் உடம்பிற்கு வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியான படி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்க வல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
http://ranjithcronje.blogspot.qa
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறை படுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இது மட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதி பத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்க படுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது.இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.