DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, June 25, 2016

பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்.

எச்சரிக்கை:

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.

எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

Sunday, June 19, 2016

நீங்கள் பிறந்த தினத்தில் இருந்து இந்த வினாடி வரை பல தகவல்களை அறிய உதவும் இணையதளம்

நீங்கள் பிறந்த தினத்தில் இருந்து இன்றுவரை உங்களுக்கு எத்தனை வருடங்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை நாட்கள்? என்பதனை கூற முடியுமா?


நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இது வரை உங்கள் இதயம் எத்தனை தடவைகள் துடித்துள்ளது/துடித்துக்கொண்டிருக்கின்றது?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை எத்தனை தடவைகள் சுவாசித்துள்ளீர்கள்?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை சந்திரன் எத்தனை தடவைகள் பூமியை வலம் வந்துள்ளது?
நீங்கள் பிறக்கும் போது இந்த உலகில் எத்தனை பேர் உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்? தற்பொழுது எத்தனை பேர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.?

புவி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம் அல்லாவா?
அதனடிப்படையில் அவ்வாறு சுற்றுவதன் மூலம் நாம் பிறந்தது தொடக்கம் இதுவரை புவியின் மையத்தை சுற்றி எவ்வளவு தூரம் பயணித்திருப்போம்?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை சூரியனை சுற்றி எவ்வளவு தூரம் பயணித்திருப்பீர்கள்?


இவைகள் தவிர.......

நீங்கள் குழந்தை பாருவத்தில் இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
நீங்கள் சிறுவனாக அல்லது சிறுமியாக இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
நீங்கள் இளைஞனாக அல்லது யுவதியாக இருக்கும் போது உலகில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
உங்களுக்கு 20 வயதாக இருக்கும் போது உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன?


என்பது மட்டுமின்றி

நீங்கள் பிறந்த பின் 500 ஆவது நாளை அடைந்த தேதி  என்ன?
அதே போல் 1,000, 2,000, 5,000, போன்ற நாட்களை கடந்த தேதிகள் என்ன? அதன் பிறகு நீங்கள் பிறந்த தேதியில் இருந்து  10,000,  20,000 நாட்களை அடையும் தேதி என்ன?
நீங்கள் பிறக்கும் போது உலகில் எத்தனை பேர்கள் பிறந்தார்கள்? அவர்களுள் இன்னும் உயிருடன் இருப்பவர்கள் எத்தனை நபர்கள்?
உலகில் உங்களை விட இளமையானவர்கள் எத்தனை பேர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்?


சரி இவற்றுக்கெல்லாம் விடை தருகின்றது Getting Old எனும் இணையதளம் இந்த தளத்துக்குச் சென்று உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் ஒரு சில வினாடிகளிலேயே மேற்கூறப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமான விடையை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையதளம்

http://you.regettingold.com/

Thursday, June 16, 2016

குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவுகள்!


தக்காளி

தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சில சமயங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதன் சுவையும் மாறக்கூடும்.

உருளைக்கிழங்கு

குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்தை தனியே பிரிவதுடன், அது கெட்டியாகவும், இனிப்பு சுவை உடையதாகவும் மாறுகிறது. இதனை தடுக்க அறை வெப்பநிலையிலேயே பேப்பர் பாக்கில் சுற்றி வைக்கலாம்.

தேன்

தேனின் மென்மையான மற்றும் திரவ அமைப்பு மாறாமல் இருக்கவும், கெட்டியாகாமல் தடுக்கவும் அதனை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.

பிரட்

குளிர்சாதன பெட்டியின் உள்ளே பிரட்டை வைப்பதால் அவை காய்ந்தும், கடினமாக மாறியும் பயன்படுத்த முடியாத நிலையை அடையும்.

காபி கொட்டை

குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் மணத்தைப்போக்க ஒன்றிரண்டு காபி கொட்டைகளை உபயோகிக்கலாம். ஆனால் நாம் அருந்துவதற்காக பயன்படுத்தும் காபி தூளை வைக்ககூடாது, ஏனெனில் இதன் உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கி விடும். எனவே இவற்றை அறை வெப்பநிலையில் மூடப்பட்ட கொள்கலனில் சேமித்து வைத்து பயன்படுத்துவதே சிறந்தது.

வெங்காயம்

வெங்காயத்தை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது, ஏனெனில் இது மற்ற காய்கறிகளின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். தேவைப்படும் பட்சத்தில் ஒருநாள் வேண்டுமானால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.

Wednesday, June 15, 2016

மனிதனிடமிருந்து நீக்க வேண்டிய தீய குணங்கள்

1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்

Tuesday, June 14, 2016

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்.


1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள் - இயற்கை மருத்துவம்


சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.
* அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.
* அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
* மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.
* உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.
* உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?


1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.