DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, June 14, 2016

இயற்கை மருத்துவம்


1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""
16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”

Monday, June 13, 2016

புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்….!!


குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களின் செல்போனுக்கு Private Number லிருந்து போன் செய்து தாங்கள் கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும் உங்களது செல்போன் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது என்றும் கேள்வி கேட்கிறார்கள். கணவரின் பெயரில் இருக்கிறது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறும்போது அது ஏற்றுக் கொள்ளப்படாது. உங்களுடைய போட்டோக்களையும், முகவரியையும் நாங்கள் கொடுக்க கூடிய நம்பருக்கு அனுப்புங்கள், இல்லையென்றால் உங்களது சிம் கார்ட் ரத்து செய்யப்படும் என வலையில் விழ வைக்கும் நாசக்கார சம்பவம் தமிழகத்தில் நடந்து வருகிறது. மேலும் அவர்கள் கூறும்போது உங்களது சிம் கார்டை ரத்து செய்து விட்டால் கார்டிலுள்ள அனைத்து பணமும் ரத்தாகிவிடும் என்றும் மிரட்டி சொந்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆகையால் குடும்ப பெண்களுக்கு தெரியாத நம்பரிலிருந்து எந்த போன் வந்தாலும் அவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் !


மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் நாம் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய 21 விடயங்கள்
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்..
1 – சிங்கம் எந்த ஒரு விடயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 – கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 – விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 – இரவில் குடும்பத்துடம் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும்.
6 – கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அதிகாலையில் எழுவதில் நன்மைகள்


அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.
அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக் கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.

Thursday, June 9, 2016

உங்கள் Facebook கணக்கில் Hackers நுழைந்து உள்ளார்களா அல்லது இல்லையா என்பதை பார்ப்பது எப்படி ?

இந்த போஸ்ட் மூலம் உங்கள் Facebook கணக்கு எப்போது எவ்விடத்தில் எந்த Browser இல் எந்நேரத்தில் Login செய்யபட்டுள்ளது என்பதை அறியலாம். இதற்கு முதலில் உங்கள் Facebook யின் Settingsபகுதிக்கு செல்க. அதில் {{Security Option}} கு செல்க அங்கு சென்றவுடன் கணினியில் என்றால் இறுதியில் {{Where You're Logged In}} என்று ஒரு option இருக்கும். Mobile என்றால் {{Active Sessions}} என்று இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் நீங்கள் இதுவரை காலமும் எந்த browser ல எந்த இடத்தில உங்கள் Facebook கணக்கை login செய்தீர்கள் என்பதை காட்டும். அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அதில் தேவையற்ற login பதிவுகளை End Activity கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் . அதன் மூலம் உங்கள் Facebook குறித்த இலிருந்து Logout ஆக்கப்படும் . mobile இல் இவ்வாறு காட்டப்படும். அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அதில் தேவையற்ற login பதிவுகளை Select செய்து Remove கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் Facebook குறித்த Software இலிருந்து Logout ஆக்கப்படும்.

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்


* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.
* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம். * சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.
* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம். * உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.
* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.

ராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்கள் தெய்வம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) சிவன் ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்); - சக்தி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர் பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்) சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்