இந்த போஸ்ட் மூலம் உங்கள் Facebook கணக்கு எப்போது எவ்விடத்தில் எந்த Browser இல் எந்நேரத்தில் Login செய்யபட்டுள்ளது என்பதை அறியலாம்.
இதற்கு முதலில் உங்கள் Facebook யின் Settingsபகுதிக்கு செல்க.
அதில் {{Security Option}} கு செல்க
அங்கு சென்றவுடன் கணினியில் என்றால் இறுதியில் {{Where You're Logged In}} என்று ஒரு option இருக்கும்.
Mobile என்றால் {{Active Sessions}} என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தவுடன் நீங்கள் இதுவரை காலமும் எந்த browser ல எந்த இடத்தில உங்கள் Facebook கணக்கை login செய்தீர்கள் என்பதை காட்டும்.
அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும்.
அதில் தேவையற்ற login பதிவுகளை End Activity கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் .
அதன் மூலம் உங்கள் Facebook குறித்த
இலிருந்து Logout ஆக்கப்படும் .
mobile இல் இவ்வாறு காட்டப்படும்.
அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும்.
அதில் தேவையற்ற login பதிவுகளை Select செய்து Remove கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
அதன் மூலம் உங்கள் Facebook குறித்த Software இலிருந்து Logout ஆக்கப்படும்.
Thursday, June 9, 2016
வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்
* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.
* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.
* சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.
* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.
* உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.
* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.
ராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?
மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள் தெய்வம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -
சூரியன் (ஞாயிறு) சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் -
சந்திரன் (திங்கள்); - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி
நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,!!
ஒரு உயர் நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,,
மாணவன் ,,, அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்,,,
டீச்சர் ,,,கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும் ,,,,யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் ,,.
மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்,,,இவர்களை பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,,மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,,
மாணவன் ,,., இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்,..கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சர் ,,,இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,,,யார் நீக்குவாய் என்றார்,,,
மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,,
மாணவன்,,,வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,..
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,,யார் பெயரை அழிப்பான் என்று,,.
மாணவன் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்,..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சரும்,,,மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு ,..எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை,..
அதற்கு மாணவன் ,,,, மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்,,,மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்,,,
கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான்,,,என்றான்,,,,
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு,,,,,
இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,,
உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம்.
உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.
IT act section 66A. Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment
உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும்.
IPC Section 509: Word, gesture or act intended to insult the modesty of a woman: Acts of sexual harassment demeaning a woman on the basis of her gender or sexuality - and other forms of sexual abuse faced by women online - can fall under this. one year imprisonment
உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள்.
IPC Section 499: Defamation:
Harming the reputation of a person through words, signs, or visible representations. Many women bloggers and Tweeters say that the violent sexist slander they receive goes on to create an irrecoverably negative message for them within their communities, societies, etc. 2 years imprisonment
இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
Subscribe to:
Comments (Atom)






