தானே விவசாயம் செய்யும் டிராக்டர்👇👇👇
உழும், விதைக்கும், அறுவடையும் செய்யும் கூகுள், போர்டு, டொயோட்டா போன்ற நிறுவனங்களின் ஓட்டு நரில்லாத வாகனங்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன.
ஆனால், சற்றும் எதிர்பாராத செய்தி என்றால் அது, ஓட்டுநரில்லாமல் இயங்கும் விவசாய டிராக்டர்! சி.என்.எச்., இண்டஸ்டிரியல் என்ற அமெரிக்க நிறுவனம் அதை உருவாக்கி வெள்ளோட்டம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இது உருவாக்கியிருக்கும், ‘கேஸ் அய்.எச்., கான்செப்ட்’ என்ற டிராக்டரில் ஓட்டுநர் உட்காருவதற்கு இடமே இல்லாமல் மொழுக்கென்று இருக்கிறது. மாறாக, நான்கு கேமராக்கள், ஏகப்பட்ட உணர்வான்கள் பொருத்தப் பட்டுள்ளன.
இதை தொலைதூரத்திலிருந்து விவசாயி கண் காணிக்கலாம். விரும்பினால் அங்கிருந்தே டிராக்டரை செலுத்தவும் செய்யலாம். இதற்கென்று மடிக்கணினி அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள செயலியை பயன் படுத்தினால் போதும். விவசாய நிலத்தின் அமைப்பு மற்றும் வரைபடத்தை ஓட்டுநரில்லா டிராக்டருக்கு புரியவைக்க மென்பொருள் இருக்கிறது.
ஒரு முறை பழக்கிவிட்டால் டிராக்டருக்கு நிலம் அத்துபடியாகிவிடும். வேறு எதிர்பாராத குறுக்கீடு வந்தால், அதை விவசாயி தன் மொபைல் மூலம் பார்த்து சரி செய்யலாம்! நிலத்தை உழுதல், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை என்று விவசாயத்தின் சகல வேலைகளுக்கும் கேஸ் அய்.எச்., கான்செப்ட் டிராக்டரை பயன்படுத்தலாம் என்கிறது சி.என்.எச்., இண்டஸ்டிரியல். இரவு, பகல்,

மழை, வெயில் பாராமல் விவசாய வேலை தொடர, இது உதவும் என்பது அவர்களது வாக்குறுதி! ‘’உலகெங்கும் இப்போது விவசாய பணியாளர்கள் குறைந்து வருகின்றனர். அறுவடை, விதைப்பு பருவங்களில் களப்பணி செய்ய ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை சமாளிக்க ஓட்டுநரில்லா டிராக்டர்கள் உதவும்,’’ என்கிறார் சி.என்.எச்., இண்டஸ்டிரியலின் அதிகாரியான ஆண்ட்ரியாஸ் கிளாசர்.
No comments:
Post a Comment