
விண்வெளி கலம் வடிவில் கட்டப்பட்ட இந்த வீடு அமெரிக்காவில் உள்ள சேட்டனுகா நகரில் உள்ளது. வீடே விண்வெளி மாதிரி இருந்தால் நல்லது என்ற எப்போதும் `மிதந்தபடி’ யார் யோசித்ததோ!
டீ குடித்துக் கொண்டே சிந்தித்ததன் விளைவோ இந்த டீ குடுவை வடிவ வீடு என்று கேட்கத் தோன்றும். 1922-ல் நடைபெற்ற `டீ பாட் டூம்’ என்ற ஊழலின் நினைவாக இந்த வீட்டை கட்டியிருக்கிறார்கள். இதுவும் அமெரிக்காவில் தான் உள்ளது.
`போயிங்-727′ என்ற விமான வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான வீடு உண்மையிலேயே ஒரு விமானம் நதி பக்கத்தில் நிற்பதுபோல் தோன்றுகிறது. ரிமோட் மூலம் இந்த வீட்டின் படிக்கட்டுகள் கீழே வரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
வீட்டுக்குள் டாய்லட் இருப்பதையே இன்னும் கிராமத்து மனிதர்கள் முழுமையாக ஒப்புக் கொண்டபாடில்லை. ஆனால் இந்த டாய்லட் வடிவ வீடு சவுத் கொரியாவில் கட்டப்பட்ட நேரத்தில் அதைப் பார்த்து பிரமித்தவர்கள் தான் அதிகம். யாருமே இம்மாதிரி டாய்லட் வடிவில் வீட்டை கட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வியை கேட்கவில்லை என்பது இந்த வீட்டின் கலை நயத்துக்கு கிடைத்த வெற்றி.
`எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற நம்ம ஊர் கவிஞரின் பாட்டு மெக்சிகோ வரை எட்டியிருக்கிறது போலும். அங்கே சங்கு வடிவத்தில் வீட்டையே கலைநயம் மிளிர கட்டி விட்டார்கள். அங்குள்ள சிற்ப வடிவ வீடுகளும் அதன் நேர்த்தியில் கவனம் ஈர்க்கின்றன.
வீட்டுக்கு வரும்போது வெளியே கழற்றி போடப்படும் `ஷூ’ வடிவத்திலும் வீடு கட்டி விட்டார்கள். இது பென்சில்வேனியாவில். அந்த நாட்டைச் சேர்ந்த மஹலோன் ஹேய்ன்ஸ் என்பவரால் கெஸ்ட் அவுசாக கட்டப்பட்ட இந்த வீட்டில் 3 பெட்ரூம், 2 கழிவறைகள், ஒரு சமையலறை, ஒரு ஹால் என அமைந்து வீட்டை ரசிக்க வைத்து விடுகிறது. மஹலோனின் மறைவுக்குப் பிறகு இந்த ஷூ வடிவ வீடு ஐஸ்கிரீம் பார்லர் ஆனது. அப்புறமாய் இப்போது மியூசியமாகி விட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்சில் உள்ளது இந்த பபிள் ஹவுஸ். 1980-களில் பிரபல பேஷன் டிசைனர் பியர்கார்டின் இந்த வீட்டை தன் ரசனைக்கேற்ப வடிவமைத்தார்.
கையில் கிடைத்ததையெல்லாம் வைத்துக் கொண்டு கட்டப்பட்ட `எலிபன்ட் ஆர்ட் ஹவுஸ்’ அமெரிக்காவில் கார்ன்வில்லா நகரில் உள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள பாலிங் ஹவுஸ், அமெரிக்க கட்டிட நிபுணர் பிரான்க் லயாட் என்பவரால் 1935-ல் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீட்டின் பாதி நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருப்பது பார்வையாளர்களை வியப்பில் புருவம் உயர்த்த வைக்கிறது.
110 டன் ஸ்டீலால் கட்டப்பட்ட வீடு, அதுவும் 23 வருடங்கள் புரனோ என்ற கட்டிடக்கலை நிபுணர் பார்த்து பார்த்து கட்டிய வீடு இது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது உட்கார்ந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பன்றியை பார்ப்பதுபோலிருக்கிறது, இந்த வீடு.
மிக்சிகனில் கட்டப்பட்ட இந்த வீடு அசப்பில் அப்படியே ஊறுகாய் ஜாடியை நினைவுபடுத்துகிறது. குவாட்டருக்கு ஊறுகாயே போதும் என்று திருப்திப்படும் பார்ட்டிகள் யாராவது கொடுத்த ஐடியாவோ என்னவோ!
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள இந்த வீடு ஸ்ட்ராபெர்ரி வடிவில் உருவாக்கப் பட்டிருக்கிறது. டெக்சாஸில் உள்ள குடுவை வடிவ வீடு, பாரோ தீவில் உள்ள இக்னோ வடிவ வீடு ஆகியவையும் அதன் சிறப்பு அமைப்பால் பார்வையாளர்களின் ரசனைப் பட்டியலுக்குள் வந்து விட்டவை.
No comments:
Post a Comment