யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.
Saturday, September 29, 2012
Friday, September 28, 2012
உங்கள் MOBILE PHONEனை பாதுகாக்க சிறந்த FREE ANTI VIRUS
நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.
எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.
ANTI VIRUS முறையாக வேலை செய்கின்றதா என பரிசோதித்து பார்ப்பது எப்படி?
ANTI VIRUS முறையாக வேலை செய்கின்றதா என பரிசோதித்து பார்ப்பது எப்படி?
உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.
முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)
கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)
உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.
முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)
கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)
Tuesday, September 25, 2012
வித்தியாசமான வீடுகள்

விண்வெளி கலம் வடிவில் கட்டப்பட்ட இந்த வீடு அமெரிக்காவில் உள்ள சேட்டனுகா நகரில் உள்ளது. வீடே விண்வெளி மாதிரி இருந்தால் நல்லது என்ற எப்போதும் `மிதந்தபடி’ யார் யோசித்ததோ!
டீ குடித்துக் கொண்டே சிந்தித்ததன் விளைவோ இந்த டீ குடுவை வடிவ வீடு என்று கேட்கத் தோன்றும். 1922-ல் நடைபெற்ற `டீ பாட் டூம்’ என்ற ஊழலின் நினைவாக இந்த வீட்டை கட்டியிருக்கிறார்கள். இதுவும் அமெரிக்காவில் தான் உள்ளது.
`போயிங்-727′ என்ற விமான வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான வீடு உண்மையிலேயே ஒரு விமானம் நதி பக்கத்தில் நிற்பதுபோல் தோன்றுகிறது. ரிமோட் மூலம் இந்த வீட்டின் படிக்கட்டுகள் கீழே வரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
வீட்டுக்குள் டாய்லட் இருப்பதையே இன்னும் கிராமத்து மனிதர்கள் முழுமையாக ஒப்புக் கொண்டபாடில்லை. ஆனால் இந்த டாய்லட் வடிவ வீடு சவுத் கொரியாவில் கட்டப்பட்ட நேரத்தில் அதைப் பார்த்து பிரமித்தவர்கள் தான் அதிகம். யாருமே இம்மாதிரி டாய்லட் வடிவில் வீட்டை கட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வியை கேட்கவில்லை என்பது இந்த வீட்டின் கலை நயத்துக்கு கிடைத்த வெற்றி.
`எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற நம்ம ஊர் கவிஞரின் பாட்டு மெக்சிகோ வரை எட்டியிருக்கிறது போலும். அங்கே சங்கு வடிவத்தில் வீட்டையே கலைநயம் மிளிர கட்டி விட்டார்கள். அங்குள்ள சிற்ப வடிவ வீடுகளும் அதன் நேர்த்தியில் கவனம் ஈர்க்கின்றன.
வீட்டுக்கு வரும்போது வெளியே கழற்றி போடப்படும் `ஷூ’ வடிவத்திலும் வீடு கட்டி விட்டார்கள். இது பென்சில்வேனியாவில். அந்த நாட்டைச் சேர்ந்த மஹலோன் ஹேய்ன்ஸ் என்பவரால் கெஸ்ட் அவுசாக கட்டப்பட்ட இந்த வீட்டில் 3 பெட்ரூம், 2 கழிவறைகள், ஒரு சமையலறை, ஒரு ஹால் என அமைந்து வீட்டை ரசிக்க வைத்து விடுகிறது. மஹலோனின் மறைவுக்குப் பிறகு இந்த ஷூ வடிவ வீடு ஐஸ்கிரீம் பார்லர் ஆனது. அப்புறமாய் இப்போது மியூசியமாகி விட்டது.
நகரப்பேருந்துகளின் வழித்தடங்களை கண்டறிவது எப்படி?
பெரு நகரங்களுக்கு செல்லும் போது நம்மால் நகரப் பேருந்துகளின் வழித்தடங்களை எளிதாக கண்டறிய இயலாது. உங்களிடம் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தால் அந்த கவலையே இல்லை. மொழி தெரியாத நகரத்திலும் நீங்கள் எளிதாக பேருந்து வழித் தடங்களை கண்டு பிடிக்கலாம்.
சென்னையில் மிகப் பெரிய பிரச்சினை எந்தப் பேருந்து எந்தத் தடத்தில் செல்லும் என்று கண்டறிவதற்குள் விடிந்து விடும். ஆனால் இந்த App இதை எளிதாக்குகிறது. இதை தரவிறக்கம் செய்து "From To" என்பதில் புறப்படும் இடம், இறங்கும் இடம் கொடுத்தால் வரிசையாக வந்து நிற்கின்றன பேருந்து எண்கள். பேருந்து நேரடியாக இல்லாவிட்டாலும் மாற்று வழித் தடங்களை இது காண்பிக்கிறது.
Monday, September 24, 2012
U TORRENT மென்பொருள் டவுன்லோட் செய்ய
நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவைகளை டோரென்ட் பைல்களாக டவுன்லோட் செய்வோம். டோரென்ட் பைல்களில் இருந்து நம் கணினியில் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. அதற்க்கு பெரும்பாலானவர்கள் இந்த U Torrent மென்பொருளை பயன் படுத்துகிறார்கள். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி புதிய பதிப்பாக 3.0(build 26473) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
VLC மீடியா பிளேயர் டவுன்லோட் செய்ய
உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் VLC Media Player. சமீபத்தில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டது. இப்பொழுது இதன் புதிய பதிப்பான VLC2.0.1 பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பில் மேலும் பல மீடியா பைல்களை சப்போர்ட் செய்யும் படி உருவாக்கி உள்ளனர். முக்கியமாக ஆப்பிள் கணினிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)