சிலர் வீடுகளில் வைத்துள்ள பொருட்கள் பார்க்க அழகாக இருக்கும். சிலர் வீடுகளில் பொருட்களை கண்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள்.நண்பர் ஒருவர் வீட்டில் இறைந்துள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தக்கூடாதா என கேட்டதற்கு வீடு இப்படி இருந்தால்தான் வீடு மாதிரி இருக்கும். இல்லையென்றால் மியூசியம் போல் இருக்கும்.என்றார்..கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாதல்லவா? புதிய வீடு கட்டினாலும் -வீடு மாறி குடித்தனம் சென்றாலும் தலைவலி பிரச்சனை வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பதுதான். நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.
2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புதிய ப்ராஜக்ட் ஆக நீங்கள் உங்கள அறையின் அளவினை தேர்வு செய்யுங்கள.அளவு இன்ச் அல்லது மீட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.
அதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜக்ட்டையும் தேர்வு செய்து பாருங்கள்.
நான் வீட்டுக்கு தேவைப்படும் Accessories தேர்வுசெய்துள்ளேன். அதன் படங்கள் கீழே உள்ளது. தேவையான படத்தினை தேர்வு செய்து கர்சர் மூலம் (டிராக் & டிராப்) செய்து தேவையான இடத்தில் வைக்கவும்.
இப்போது கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தரையின் நிறத்தையும் -சுவரின் நிறத்தையும்நாம் விருப்ப படி தேர்வு செய்துகொள்ளலாம்.
இதற்குமேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் விளக்கமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.வீட்டினை அழகுப்படுத்திப்பாருங்கள்
No comments:
Post a Comment