விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது .
பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது .
இணையதள முகவரி :http://www.nobelprize.org/educational/all_productions.html
நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும் விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி :http://www.nobelprize.org/educational/all_productions.html
No comments:
Post a Comment