புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது சோட்டர்.
இந்த தளம் புகைப்படங்கள் மீது விருப்பம் போல விளக்க குறிப்புகளை இடம் பெற வைக்க கைகொடுக்கிறது.
பொதுவாக விளக்க குறிப்புகளை புகைப்படத்தின் கீழே சில வரிகளாக இடம் பெற வைக்கலாம்.பத்திரிகைகளிலும் இணையத்திலும் இத்தகைய குறிப்புகளை தான் அதிகம் பார்க்கலாம்.
ஆனால் சோட்டர் புகைப்படத்தின் மீதே குறிப்பெழுத உதவுகிறது.அதிலும் புகைப்படத்தின் எந்த பகுதியையும் அழகாக சுட்டிக்காட்டி அதன் அருகே பொருத்தமான குறிப்புகளை இடம் பெறசெய்யலாம்.
எந்த புகைப்படத்திற்கு குறிப்புகள் தேவையோ அதனை இந்த தளத்தில் பதிவேற்றி பின்னர் அதில் தேவையான பகுதியை வட்டமிட்டொ அல்லது சதுர வடிவிலோ சுட்டிக்காட்டி அதில் குறிப்பெழுதலாம்.குறிப்பிட்ட இடத்தில் அம்பு குறியையும் தோன்றச்செய்யலாம்.
சுட்டிக்காட்டும் பகுதிக்கான வண்ணத்தையும் கூட நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.தேவை என்றால் புகைப்படம் மீதே வரையவும் செய்யலாம்.
புகைப்படத்திற்கான குறிப்புகளை பூர்த்தி செய்த பின் அதனை அப்படியே சேமித்து வைத்து கொள்வதோடு நண்பர்களோடு பேஸ்புக் டிவிட்டர் மூலம் பகிர்ந்தும் கொள்ளலாம்.
புகைப்படங்களை கூடுதல் தகவல்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment